இராணுவ தீர்பாயங்கள் சாதித்தது என்ன ?
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட இராணுவ
தீர்ப்பாயங்கள், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 4000 – 5000 வரை
நல்ல தீர்ப்புகள் வழங்கி உள்ளன. ஆனால் அதில்
பெரும்பாலான தீர்ப்புகள் இன்னும் அமுல் படுத்தவில்லை என்பது
மிகவும் வருந்தத்தக்க செய்தி. சாதாரண படை வீரர்களை உச்ச நீதிமன்றம் வரை
இழுத்தடிப்பதர்க்கு இராணுவ அமைச்சகம்
தயங்குவதில்லை.
செயல்படுத்த படாத தீர்ப்புகளுக்கு ராணுவ அமைச்சகத்தின்
மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாத நிலையும் உள்ளது. நல்ல தீர்ப்பு பெற்றவர்கள் அதை நடைமுறை படுத்த
விண்ணப்பம் கொடுக்காமல் எந்த தீர்ப்பையும் அமுல் படுத்த வேண்டாம் என்று
கடிதங்களும் அனுப்பி உள்ளது. நீதி, நேர்மையற்ற ஒருசில அரசின் கொள்கைகளை இந்த
தீர்ப்பாயங்கள் சுட்டிக்காட்டி
பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கும்போது
அதை அமுல்படுத்த மறுக்கிறது அரசு.
நீதி மன்றத்தில் வழக்கு
தொடுப்பவர்கள் அரசின் எதிரிகளாக கருதப்படுகின்றனர். எந்த ஒரு வழக்கையும் உச்ச நீதி மன்றம் வரை
எடுத்து செல்லும் எண்ணத்தில் வாதாடுகின்றனர்
அரசு வழக்கரிஞர்கள்.
இதை ஒரு சாதாரண படை வீரனால் ஏற்றுகொள்ள முடியாது.
எனவே ராணுவ
தீர்ப்பாயம் என்பது வெறும் கண்துடைப்பு போல் தெரிகிறது.
தீர்ப்புகள்
அனைத்தும் இராணுவ அமைச்சகத்தை பாதிப்பதால் இந்த
தீர்ப்பாயங்களை
இராணுவ அமைச்சகம் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொடுள்ளது.
இராணுவ தீர்ப்பாயங்கள் சுதந்திரமாக செயல்பட
இவை சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். இது சம்பந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
அமுலாகும் போதுதான் விடிவு காலம் பிறக்கும்.
@@@@@@@
No comments:
Post a Comment