இரண்டு
குடும்ப பென்சன்
நமது
நியாமான கோரிக்கைக்கு இணங்கியது அரசு.
இரண்டு குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது எந்த விதத்திலும் நியாயம்
இல்லை. இது போன்ற பென்சன் விதிகளை
அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. அதிகார
வர்க்கம்தான் உருவாக்கியது. இதன் பாதிப்பு
அவர்களுக்கு இல்லை. ஆதி முதல் அந்தம் வரை
அதிகார தோரணையில் கொடிகட்டி பறக்கும் இவர்களுக்கு அடிமட்ட மக்கள் படும் இன்னல்கள்
கண்ணுக்கு தெரிவதில்லை.
இந்த நாட்டில் உள்ள தலை சிறந்த விஞ்ஞானிகள், புகழ்பெற்ற
மருத்துவர்கள், சமூக சேவர்கள், தொழில் முனைவோர் போன்றவர்களுக்கு இல்லாத மரியாதை
இந்த அதிகார வர்க்கத்துக்குத்தான் உள்ளது.
இது மாபெரும் துரதிர்ஷ்டம்.
அப்பாவி இராணுவ பென்சனர்களின் பென்சன் விதிகளில் ஒரு வரியை மட்டும்
அமைதியாக சேர்த்துவிட்டு, பல்லாயிரகணக்கான விதவைகளின் வயிற்றில் அடித்து
விட்டார்கள் இவர்கள். இரண்டு அரசு பணிகள்
செய்த ஒரு இராணுவ வீரர் இரண்டு பென்சன் பெறவும் இரண்டு குடும்ப பென்சன் பெறவும்
விதிகள் அனுமதிக்கும் போது விதவைகளுக்கு மட்டும் மறுப்பது என்ன நியாயம். இதனால் பெரிதும் பாதிக்க பட்டது குறைந்த
பென்சன் வாங்கும் இராணுவ பென்சனர்கள்தான்.
காலம் மாறியது, நமது கல்வியறிவும் வளர்ந்தது. நீதிக்காக குரல் எழுப்போனோம். இந்த அதிகார
வர்க்கத்தின் ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமாகியது.
இப்போது 24.09.2012
முதல் இரண்டு குடும்ப பென்சன் தடையில்லை என்று
கூற, முன்பு சேர்த்த அந்த வரியை இப்போது நீக்கிவிட்டது. நீதிமன்றங்களில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள்
தேங்க காரணம் இந்த அதிகார வர்க்கம்தான் என்பதை அரசு உணர வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் போர்கால அடிப்படையில்
நடக்கவேண்டும். காலம் தாழ்த்துவது
நாட்டுக்கு நல்லதில்லை. நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நீதிக்காக போராடவேண்டும்.
No comments:
Post a Comment