பாரத ஸ்டேட் வங்கியில் மறு பணியில் சேர்ந்து
ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர்களுக்கு
ஓர் வேண்டுகோள்
உலகத்திலேயே
பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கிதான் அதிமான அளவு முன்னாள்
இராணுவத்தினரை காவலர் பணிக்கு நியமித்தது அன்று.
இன்று நிலைமை வேறு. ஸ்டேட் வங்கியில் இந்த காவலர்கள் மிடுக்கான உடையில் நிற்கும் அழகே தனி. பாரத ரிசர்வ் வங்கிக்கும், ஸ்டேட் வங்கிக்கும் பெருமை சேர்ப்பதில் இந்த காவலர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக இருந்த காரணத்தால், கடைசி வரை காவலர்களாக இருந்து ஒய்வு பெற்றனர். பெரும்பாலானவர்களுக்கு இந்த வங்கி பென்சன் கொடுக்க வில்லை என்பது பலருக்கு தெரியாது.
பாரம்பரியம்மிக்க
இந்த பெரிய வங்கியில் பென்சன் திட்டம், அதுவும் குடும்ப பென்சன் திட்டம்,
நீதிமன்றம் சென்றுதான் பெற முடிந்தது.
இந்த வங்கியில் பணிபுரியும் ஒரு முன்னாள் படை வீரர், பென்சன் பெரும் தகுதி
பெறுவதற்கு பல வினோதமான நிபந்தனைகள் இருந்தன.
இதன் காரணமாக இந்த வங்கியில் பணிபுரிந்த பெரும்பாலான முன்னாள் படை வீரர்கள்
பென்சன் கிடைக்காமல் ஒய்வு பெற்றனர்.
காலபோக்கில்
பென்சன் விதிகளில் சில மாற்றங்கள் வந்த காரணத்தால் ஒரு சில பேருக்கு பென்சன்
கிடைக்க வாய்ப்பு கிடைத்தது. இருந்த
போதிலும் ஸ்டேட் வங்கியின் குடும்ப பென்சன் ஒட்டுமொத்தமாக இந்த முன்னாள் படை
வீரர்களின் விதவைகளுக்கு மறுக்கப்பட்டது.
சரியான காரணம் இல்லாமல் மத்திய அரசின் பென்சன் விதிகளை (CCS Pension Rules) மேற்கோள் காட்டி
குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது. இதன்
காரணமாக எண்ணற்ற விதவைகள் இந்த வங்கியுடன் எந்த தொடர்பும் இன்றி வாழ்ந்து
வருகின்றனர். ஆனால் பெரும்பாலான
விதவைகளிடம் ஸ்டேட் வங்கியின் குடும்ப பென்சன் பெறுவதற்கான ஆணைகள் இருந்தும்
பென்சன் கிடைக்காமல் இருக்கின்றனர்.
இப்போது மத்திய
அரசு இதே போன்ற விதவைகள் 24.09.2012 முதல் இரண்டு பென்சன் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணைகள் வெளியிட்டுள்ளது. காலம் கடந்து வந்துள்ள இந்த அரசாணையின் பயன்
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போய் சேர
வேண்டுமென்றால் அவர்கள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிய வேண்டும். இந்த செய்தியை அவர்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது
?
வங்கியே
முன்வந்து சுற்றறிக்கை விடலாம். ஸ்டேட்
வங்கி பென்சனர் சங்கம் வேண்டிய உதவிகள் செய்யலாம். இதை படிக்கும் வாசகர்கள் தனக்கு
தெரிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சொல்லலாம்.
மிலிடரி கேண்டீன், ECHS பாலி கிளினிக்குகளில் நோட்டிஸ்
ஒட்டி தெரிய படுத்தலாம். இன்னும் எத்தனையோ
வழிகளில் நம் இனத்தவர்களுக்கு உதவி செய்யலாம்.
இந்த வலைப்பூவை
நிர்வகிக்கும் EXWEL TRUST, IESM மற்றும் SBI PENSIONERS
ASSOCIATION ஆகிய மூவரும்
சேர்ந்து இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முயற்சிகள் செய்து வருகிறோம்.
இந்த பென்சன்
கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உங்களுக்கு யாரேனும் தெரிந்தால், அவர்கள் பெயர்,
முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எங்களுக்கு தெரிவிக்கவும்..
இந்த செய்தி மற்ற அரசு நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கும் பொருந்தும்.
எங்கள் தொலைபேசி எண் : 9894152959, 9786449036
நமது கூட்டு முயற்சியை ஒரு சமூக நலனுக்காக
அர்ப்பணிப்போம்.
இரண்டு குடும்ப பென்சன் அரசாணை பெற
இங்கே கிளிக் செய்யவும்
இரண்டு குடும்ப பென்சன் அரசாணை பெற
இங்கே கிளிக் செய்யவும்
உங்கள் முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள்.
ReplyDelete