சந்தோஷத்தில் மூழ்கிய பென்சனர் |
ஒரு விமான படை வீரருக்கு 48 ஆண்டுகளுக்கு பின்
பென்சன் கிடைத்தது என்பது
செய்தி.
சாதாரணமாக பாதுகாப்பு படையில் வீரர்களை ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கு தொடர்ந்து பணியில் வைத்துக்கொண்டு அதன்பின்னர் ரிசர்விஸ்ட் பென்சன்
கொடுப்பது வழக்கம். இந்த நடைமுறை தற்போது
இல்லை.
இது போன்ற நிபந்தனைகளுடன் பணி விலகி வந்த பலர் இந்திய
ராணுவத்தில் பென்சன் பெற்று வருகின்றனர்.
ஆனால் விமானபடையில் இதே போன்ற நிபந்தனையுடன் பணி புரிந்து
வெளி வந்தவர்களுக்கு ரிசர்விஸ்ட் பென்சன் கொடுப்பதாக தெரியவில்லை. “உங்கள் சேவை
தேவை இல்லை” (Your services are no longer
required”) என்ற குறிப்புடன் ஒன்பது
ஆண்டுகளுக்குப்பின் வெளியே அனுப்பிவிட்டு ஆறு ஆண்டுகள் ரிசர்வ் என்று சரியானபடி
குறிப்பிடாமல் பல விமான படை வீரர்களுக்கு பென்சன் வழங்க படவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. யாரும் கண்டு
கொள்ளவும் இல்லை.
ஆனால் சமீபத்தில் இது சம்பந்தமாக AFT Principal Bench, New Delhi யில் நடந்த (TA 564 of 2010) ஒரு வழக்கில் 75 வயதான பலருக்கு பென்சன் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
சமீபத்தில் ஒரு Ex 201674 CPL Rishi Kumar என்பவர் 08.05.1948 முதல் 08.05.1957 வரை ஒன்பது ஆண்டுகள் பணி புரிந்து அதன் பின்னர் 15.02.1963 இல் ரிசர்வ் நிபந்தனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் கடந்த 30.04.2011 அன்று 48 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பம் செய்து பென்சனும் 48 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையும் பெற்றுள்ளதாக செய்தி வந்துள்ளது.
எனவே இதே நிபந்தனைகளுடன் விமான படையில் இருந்து வெளிவந்து
பென்சன் பெறாமல் இருந்தால் உடனே Pension
and Welfare Wing, AFRO, Subroto Park, New Delhi 110010 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எழுபது வயதை கடந்து
இருப்பார்கள். எனவே இவர்களுக்கு உதவ
குடும்பத்தில் உள்ளவர்களும், நல சங்கங்களும் முன் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
எண்கள்:
Exsm. Help Line Centre : 044-25675236
Sgt.S.Kandiah (Retd.) 9786449036
Sgt.Shanmugam (Retd.) 9500355847
(Source : “From the Tarmac” Air
Force Journal)
No comments:
Post a Comment