Monday, 1 October 2012

நமது படை வீரர்களின் ஒழுக்கம்.


 நமது படை வீரர்களின் ஒழுக்கம்.
 
நமது படை வீரர்களின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் குறைந்துவிட்டதா?  அதிகாரிகளின் அதிகார துஷ்ப்ரயோகம் அதிகரித்துவிட்டதா?  எங்கோ ஏதோ பிரச்சனை இருக்கிறது.  இதை கண்டறிந்து விரைவில் சரி செய்யவேண்டும்.

சிப்பாய் விஷ்வ மாகன் பிள்ளை ஓணம் பண்டிகைக்கு வருவார் என்று வீட்டில் அனைவரும் ஆவலுடன் இருந்த நேரத்தில், வந்ததோ அவருடைய சவப்பெட்டி. கடந்த 08.08.12 அன்று.  தகுந்த காரணம் இல்லாமல் விடுமுறை மறுக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் மோகன் பிள்ளை.  திருவனந்தபுரத்தை சேர்ந்த சிப்பாய் அருண் என்பவரும் இதேபோல் தற்கொலை செய்துகொண்டார்.  ஒரு ராணுவ அதிகாரி வீட்டில் ஆர்டர்லியாக பணிபுரிந்த ஒரு சிப்பாய், தன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சந்தேகத்தின் பேரில் அந்த சிப்பாயை அடித்து துன்புறுத்தி, அவருக்கு மருத்துவ உதவிகூட கிடைக்க விடாமல் செய்தார் ஒரு மேஜர்.  இது நடந்தது ஜம்மு கஷ்மிர்ரில் உள்ள ஒரு முக்கிய ராணுவ முகாமில்.  நமது தலைநகர் டெல்லியில் ஒரு ராணுவ வீரர் செல் போன் டவர் மேல் ஏறிக்கொண்டு, தனது அதிகாரி துன்புறுத்துவதால் தற்கொலை செய்யபோகிறேன் என்கிறார்.

இதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்த படைவீரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட நிலைமை மோசமாகி பின்னர் கட்டுக்குள் வந்தது..  ராணுவ அதிகாரிகளும் படைவீரர்களும் ஒரு சத்தியத்துக்கு கட்டுபட்டால்தான் பணியாற்றமுடியும்.  நமது ராணுவ அமைச்சர் மிகவும் வேதனை கொண்டார்.  ஆனால் நம் ராணுவ தளபதியோ “பத்து லட்சம் படைவீரர்களைகொண்ட ராணுவத்தில் இது ஒரு சிறிய நிகழ்ச்சி” என்கிறார்.  ராணுவ அமைச்சகத்தில் உள்ள அதிகார வர்க்கமோ இதை கண்டு கொள்ளவில்லை.

என்றும் இல்லாத அளவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25000 படை வீரர்கள் விருப்ப ஓய்வில் செல்ல முன் வந்துள்ளனர்.  சுமார் 12000 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 1028 படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதில் சுமார் 80 வரை தன் உடன்பிறப்புகளை கொலை செய்த வகையாகும். உலகில் பெரிய ராணுவத்தை கொண்ட அமெரிக்காவுக்கும் இதே பிரச்சனை உண்டு.  ஆனால் அதன் காரணத்தை நம்மோடு ஒப்பிட முடியாது..

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தன அனுபவத்தில் சொல்வது “இன்றைய படை வீரர்கள் போரில் எத்தனை வீரத்துடன் செயல்படுவார்கள் என்பது, முன்னாள் படை வீரர்களை அந்த நாடு எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்துதான் இருக்கும்”.  இன்று நம் படை வீரர்கள் வீதிக்கு வரும் நிலை வந்துவிட்டது.  அரசியல் தலைவர்கள் இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இன்றைய இந்திய ராணுவம் எதிகொள்வது நேரடி போர் இல்லை.  மறைமுக (தீவிராவாத போர்)  இதை நிறுத்த ராணுவத்தை பயன் படுத்துவது தீர்வல்ல.  நம் எதிரி நாடுகளுக்கும் இது பொருந்தும்.  இந்த சூழ்நிலையில் நமது அணுகுமுறை மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர நாட்டு பற்று கொண்ட மக்களும், நல்ல அரசியல் தலைவர்களும், தீர்வும் தான் ஒரே வழி.  ராணுவ அடக்குமுறை சமுக வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.  நமது ராணுவ வீரர்கள் இதுபோன்ற முடிவில்லாத போரில் வெறுப்பும், விரக்தியும் அடைந்து வருகிறார்கள்.  தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணம்.

காலம் மாறுகிறது.  நமது கனவுகளும் மாறுகிறது.  இந்த நூற்றாண்டில் எந்த நாடும் வேறு நாடு மீது நேரடி படை எடுக்காது.  ஆனால் மறைமுக போர், தீவிரவாத அச்சுறுத்துதல், உள்நாட்டு கலவரங்களை தூண்டி விடுதல் ஆகியவை நடக்க வாய்ப்பு உண்டு.  எனவே நமது படைகள் இதுபோன்ற நிலையை எதிர்கொள்ள நல்ல பயிற்சி கொடுக்க வேண்டும்.

நாட்டுப்பற்றை வளர்க்க அனைவர்க்கும் கட்டாய ராணுவ பயிற்ச்சியும், அதன் பின் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ராணுவ சேவையையும் கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...