பணிக்கொடை என்ற ஒய்வு கால பலன்.
(Restoration of benefit of adding years of
qualifying service for the purpose of computing Gratuity (DCRG) … Airmen &
NCs(E)
பணி புரியும் படை வீரர்களுக்கு “பணிக்கொடை” என்பது
பென்சன், சேமநிதி, கமுடேசன் என்பதைப்போல ஒரு ஒய்வு கால பலன். இந்த பணிக்கொடையை கணக்கிட
பணிக்காலத்துடன் ஐந்து ஆண்டுகள்
வேய்டேஜ் சேர்த்து கணக்கிடப்பட்டது.
சமீபத்தில் ஆறாவது ஊதிய கமிசன் பரிந்துரைகளில் இந்த வெய்டேஜ் பென்சன்
கணக்கிட மட்டும் நீக்கப்பட்டதை தவறுதலாக இந்த பணிக்கொடைக்கும் எடுத்துக்கொண்டதால் 01.01.2006 இக்கு பின்னர் வெளி
வந்தவர்களுக்கு பணிக்கொடை குறைவாக வழங்கப்பட்டது.
இது அரசாணை MOD Letter No.17(4)/2008(2)/D(Pen/Pol)Vol.VII dated
04.Oct 2010 மூலம் 01.01.2006 முதல் வேய்டேஜ்
சேர்த்து பணிக்கொடையை கொடுக்க வேண்டும் என வந்துள்ளது.
எனவே இதை படிக்கும் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு
பணிக்கொடை சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்க்கண்ட தொலை
பேசியில் தொடர்புகொண்டு பயன் பெறவும்.
சார்ஜெண்ட்.எஸ்.கந்தையா. தொலை பேசி. 9786449036
சார்ஜெண்ட். ஷண்முகம். தொலை பேசி. 9500355847
திரு.மோகன். தொலை பேசி.8428336440
தமிழ் நாட்டில் நமது பென்சன் சம்பந்தமாக உங்களுக்கு
உதவி செய்ய பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே உள்ளனர்.
குடத்தில் இட்ட விளக்காக உள்ள இவர்களை குன்றின்மேல் அமர்த்தி நாம்தான்
பிரகாசிக்க செய்யவேண்டும்.
நல்லவர்களை பாராட்ட நாம் தயங்க கூடாது.
01.01.2006 இக்கு பின்னர் வெளி
வந்தவர்கள் உடனே தங்கள் PPO வை எடுத்து தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
பணிக்கொடை வெய்டேஜ்வுடன் சேர்த்து உள்ளதா அல்லது இல்லையா என்பதை
கணக்கிடவும்.
கணக்கிடும் முறையை தெரிந்து கொள்ள
www.indianexserviceman.blogspot.in என்ற வலைப்பதிவில் பார்க்கவும்.
ஒரு கணிசமான தொகை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உடனே சரி பார்க்கவும். இது முக்கியம்.
நன்றி: இந்திய விமான படையின்
"From the Tarmac" என்ற பத்திரிகையில் இருந்து.
No comments:
Post a Comment