Saturday, 20 October 2012

ரிசர்விஸ்ட் பென்சன்


சந்தோஷத்தில் மூழ்கிய பென்சனர்


ஒரு விமான படை வீரருக்கு 48 ஆண்டுகளுக்கு பின்
பென்சன் கிடைத்தது என்பது செய்தி.

சாதாரணமாக பாதுகாப்பு படையில் வீரர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து பணியில் வைத்துக்கொண்டு அதன்பின்னர் ரிசர்விஸ்ட் பென்சன் கொடுப்பது வழக்கம்.  இந்த நடைமுறை தற்போது இல்லை.

இது போன்ற நிபந்தனைகளுடன் பணி விலகி வந்த பலர் இந்திய ராணுவத்தில் பென்சன் பெற்று வருகின்றனர்.

ஆனால் விமானபடையில் இதே போன்ற நிபந்தனையுடன் பணி புரிந்து வெளி வந்தவர்களுக்கு ரிசர்விஸ்ட் பென்சன் கொடுப்பதாக தெரியவில்லை. “உங்கள் சேவை தேவை இல்லை (Your services are no longer required”) என்ற குறிப்புடன் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் வெளியே அனுப்பிவிட்டு ஆறு ஆண்டுகள் ரிசர்வ் என்று சரியானபடி குறிப்பிடாமல் பல விமான படை வீரர்களுக்கு பென்சன் வழங்க படவில்லை.  இது ஏன் என்று தெரியவில்லை. யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

ஆனால் சமீபத்தில் இது சம்பந்தமாக AFT Principal Bench, New Delhi யில் நடந்த (TA 564 of 2010) ஒரு வழக்கில் 75 வயதான பலருக்கு பென்சன் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

சமீபத்தில் ஒரு Ex 201674 CPL Rishi Kumar  என்பவர் 08.05.1948 முதல் 08.05.1957 வரை ஒன்பது ஆண்டுகள் பணி புரிந்து அதன் பின்னர் 15.02.1963 இல் ரிசர்வ் நிபந்தனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  இவர் கடந்த 30.04.2011 அன்று 48 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பம் செய்து பென்சனும் 48 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையும் பெற்றுள்ளதாக செய்தி வந்துள்ளது.

எனவே இதே நிபந்தனைகளுடன் விமான படையில் இருந்து வெளிவந்து பென்சன் பெறாமல் இருந்தால் உடனே Pension and Welfare Wing, AFRO, Subroto Park, New Delhi 110010 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எழுபது வயதை கடந்து இருப்பார்கள்.  எனவே இவர்களுக்கு உதவ குடும்பத்தில் உள்ளவர்களும், நல சங்கங்களும் முன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

Exsm. Help Line Centre :       044-25675236
Sgt.S.Kandiah (Retd.)             9786449036
Sgt.Shanmugam (Retd.)          9500355847

(Source : “From the Tarmac” Air Force Journal)

Friday, 19 October 2012

பணிக்கொடை பலன்.



பணிக்கொடை என்ற ஒய்வு கால பலன்.
(Restoration of benefit of adding years of qualifying service for the purpose of computing Gratuity (DCRG) … Airmen & NCs(E)

பணி புரியும் படை வீரர்களுக்கு “பணிக்கொடை” என்பது பென்சன், சேமநிதி, கமுடேசன் என்பதைப்போல ஒரு ஒய்வு கால பலன்.  இந்த பணிக்கொடையை  கணக்கிட  பணிக்காலத்துடன்  ஐந்து ஆண்டுகள் வேய்டேஜ் சேர்த்து கணக்கிடப்பட்டது.   சமீபத்தில் ஆறாவது ஊதிய கமிசன் பரிந்துரைகளில் இந்த வெய்டேஜ் பென்சன் கணக்கிட மட்டும் நீக்கப்பட்டதை தவறுதலாக இந்த பணிக்கொடைக்கும் எடுத்துக்கொண்டதால் 01.01.2006 இக்கு பின்னர் வெளி வந்தவர்களுக்கு பணிக்கொடை குறைவாக வழங்கப்பட்டது.  இது அரசாணை MOD Letter No.17(4)/2008(2)/D(Pen/Pol)Vol.VII dated 04.Oct 2010 மூலம் 01.01.2006 முதல் வேய்டேஜ் சேர்த்து பணிக்கொடையை கொடுக்க வேண்டும் என வந்துள்ளது.

எனவே இதை படிக்கும் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு பணிக்கொடை சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.  ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்க்கண்ட தொலை பேசியில் தொடர்புகொண்டு பயன் பெறவும்.
சார்ஜெண்ட்.எஸ்.கந்தையா. தொலை பேசி. 9786449036
சார்ஜெண்ட். ஷண்முகம். தொலை பேசி. 9500355847
திரு.மோகன். தொலை பேசி.8428336440

தமிழ் நாட்டில் நமது பென்சன் சம்பந்தமாக உங்களுக்கு உதவி செய்ய பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே உள்ளனர்.  குடத்தில் இட்ட விளக்காக உள்ள இவர்களை குன்றின்மேல் அமர்த்தி நாம்தான் பிரகாசிக்க செய்யவேண்டும்.
நல்லவர்களை பாராட்ட நாம் தயங்க கூடாது.

01.01.2006 இக்கு பின்னர் வெளி வந்தவர்கள் உடனே தங்கள் PPO வை  எடுத்து தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணிக்கொடை  வெய்டேஜ்வுடன்  சேர்த்து உள்ளதா அல்லது இல்லையா என்பதை கணக்கிடவும்.
கணக்கிடும் முறையை தெரிந்து கொள்ள
www.indianexserviceman.blogspot.in  என்ற வலைப்பதிவில் பார்க்கவும்.

ஒரு  கணிசமான தொகை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உடனே சரி பார்க்கவும்.  இது முக்கியம்.

நன்றி: இந்திய  விமான படையின் 
"From the Tarmac" என்ற பத்திரிகையில் இருந்து.


Tuesday, 2 October 2012

முன்னாள் படை வீரர்களின் நலன்

              

முன்னாள் படை வீரர்களின் நலன் காப்பதில் நம்
படைத்தளபதிகளின் பங்கு என்ன?

உண்மையாக சொன்னால், முன்னாள் படை வீரர்களின் நலன் காப்பது நமது படை தளபதிகளின் கடமை.  ஆனால் நடைமுறையில் நம் படை தளபதிகளுக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருப்பதுபோல் தெரியவில்லை.  ஆனால் எழுத்துபூர்வமாக அனைத்து பணிகளும் இந்த முப்படை தளபதிகளுக்கே வழங்கபடுகிறது.

உதாரணத்துக்கு ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை (Department of Ex-servicemen Welfare) எந்த ஒரு கடிதத்தையும் முப்படை தளபதிகளுக்கே அனுப்புகிறது.

ஆனால் எந்த ஒரு கடிதத்தையும் இந்த தளபதிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கத்துக்கு கூட அனுப்புவதில்லை.
(IESL, AFA, NAVAL FOUNDATION) இந்த கடிதங்கள் பென்சன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் பல நாட்கள் கழித்து சி.டி.எ அலகாபாத் இணைய தளம் மூலம் கிடைக்கிறது.  ராணுவ அமைச்சகத்தின் இணைய தளத்தில் எதுவும் வெளியிடபடுவதில்லை.  அதே போல் அதன் கீழ் இயங்கும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறைக்கு ஒரு தனி இணையதளமே கிடையாது.

அதே சமயத்தில் சிவிலியன் பணியாளர்கள் நலன் பேணும் ஓய்வூதிய நலத்துறை அருமையான இணைய தளத்தை பராமரித்து வருகிறது.
(DEPARTMENT OF PENSION AND PENSIONERS WELFARE)  பென்சனர்ஸ் போர்டல் (PENSIONERS PORTAL) என்று தொடங்கப்பட்ட இணைய தளம் ராணுவ பென்சனர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.

முப்படைகளுக்கும் தனித்தனியாக சொந்தமான இணைய தளங்கள் இருந்தும், ஒய்வு பெற்ற படை வீரர் பென்சன் பற்றிய ஆணைகள் எதுவும் வெளியிடபடுவதில்லை.  குறிப்பாக அதிகாமாக முன்னாள் படைவீரர்களைகொண்ட இந்தியா ராணுவ இணைய தளம் (Indian Army Web Site) தன்  படை வீரர்களை கண்டுகொள்வதில்லை.

முன்னாள் படை வீரர்களின் மறு வாழ்வுக்காக அமைக்கப்பட்ட ஒரு துறை (Director General of  Resettlement)  முன்னாள் படைவீரர்களை கொத்தடிமைகளாக, சௌகியதார் வேலைக்கு கண்ட கண்ட தனியார் நிறுவனங்களுக்கும், ஆரசின் பெரிய பெரிய அலுவலகங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையிலும், தின கூலி அடிப்படையி௮லும் மிக குறைந்த ஊதியத்தில் பணியமர்த்த துணை போகிறது.  இந்த கொடுமைக்கு பல ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் துணை போகின்றனர். தட்டி கேட்பார் யாரும் இல்லை.

ராணுவ தீர்ப்பாயங்கள் (Armed Forces Tribunal) அகில இந்திய அளவில் தொட ங்கி சுமார் மூன்று ஆண்டுகள் முடிவடையும் தருணத்தில், ஏறக்குறைய 2000 நல்ல தீர்ப்புகள் வழங்கியுள்ளன.  எந்த ஒரு தீர்ப்பின் பயனையும் யாரும் பெற்றதாக தகவல் இல்லை.  அத்தனை தீர்ப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  நம் தளபதிகள் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை.  இந்த தீர்ப்புகளை ஏன் இன்னும் அமுல்படுத்த வில்லை என்ற காரணத்தையாவது நம் தளபதிகள் நமக்கு சொல்லவேண்டும்.

முன்னாள் படை வீரர்களின் நலன் காப்பதும் நமது கடமை என்பது நம் தளபதிகள் மறந்துவிடக்கூடாது.

ஏதோ I.E.S.M. என்ற ஒரு நல்ல சங்கம் வந்தது முதல் ஓரளவு நம் முன்னாள் படை வீரர்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது.
நம் குறைகள் இணைய தளம் மூலம், தொலை காட்சி மூலம், செய்திதாள் மூலம் தெரிகிறது.  நமது சங்கம் டெல்லியில் மட்டும் இல்லாமல், எல்லா மாநில தலை நகரங்களிலும் செயல்பட வேண்டும்..   

Monday, 1 October 2012

நமது படை வீரர்களின் ஒழுக்கம்.


 நமது படை வீரர்களின் ஒழுக்கம்.
 
நமது படை வீரர்களின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் குறைந்துவிட்டதா?  அதிகாரிகளின் அதிகார துஷ்ப்ரயோகம் அதிகரித்துவிட்டதா?  எங்கோ ஏதோ பிரச்சனை இருக்கிறது.  இதை கண்டறிந்து விரைவில் சரி செய்யவேண்டும்.

சிப்பாய் விஷ்வ மாகன் பிள்ளை ஓணம் பண்டிகைக்கு வருவார் என்று வீட்டில் அனைவரும் ஆவலுடன் இருந்த நேரத்தில், வந்ததோ அவருடைய சவப்பெட்டி. கடந்த 08.08.12 அன்று.  தகுந்த காரணம் இல்லாமல் விடுமுறை மறுக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் மோகன் பிள்ளை.  திருவனந்தபுரத்தை சேர்ந்த சிப்பாய் அருண் என்பவரும் இதேபோல் தற்கொலை செய்துகொண்டார்.  ஒரு ராணுவ அதிகாரி வீட்டில் ஆர்டர்லியாக பணிபுரிந்த ஒரு சிப்பாய், தன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சந்தேகத்தின் பேரில் அந்த சிப்பாயை அடித்து துன்புறுத்தி, அவருக்கு மருத்துவ உதவிகூட கிடைக்க விடாமல் செய்தார் ஒரு மேஜர்.  இது நடந்தது ஜம்மு கஷ்மிர்ரில் உள்ள ஒரு முக்கிய ராணுவ முகாமில்.  நமது தலைநகர் டெல்லியில் ஒரு ராணுவ வீரர் செல் போன் டவர் மேல் ஏறிக்கொண்டு, தனது அதிகாரி துன்புறுத்துவதால் தற்கொலை செய்யபோகிறேன் என்கிறார்.

இதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்த படைவீரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட நிலைமை மோசமாகி பின்னர் கட்டுக்குள் வந்தது..  ராணுவ அதிகாரிகளும் படைவீரர்களும் ஒரு சத்தியத்துக்கு கட்டுபட்டால்தான் பணியாற்றமுடியும்.  நமது ராணுவ அமைச்சர் மிகவும் வேதனை கொண்டார்.  ஆனால் நம் ராணுவ தளபதியோ “பத்து லட்சம் படைவீரர்களைகொண்ட ராணுவத்தில் இது ஒரு சிறிய நிகழ்ச்சி” என்கிறார்.  ராணுவ அமைச்சகத்தில் உள்ள அதிகார வர்க்கமோ இதை கண்டு கொள்ளவில்லை.

என்றும் இல்லாத அளவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25000 படை வீரர்கள் விருப்ப ஓய்வில் செல்ல முன் வந்துள்ளனர்.  சுமார் 12000 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 1028 படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதில் சுமார் 80 வரை தன் உடன்பிறப்புகளை கொலை செய்த வகையாகும். உலகில் பெரிய ராணுவத்தை கொண்ட அமெரிக்காவுக்கும் இதே பிரச்சனை உண்டு.  ஆனால் அதன் காரணத்தை நம்மோடு ஒப்பிட முடியாது..

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தன அனுபவத்தில் சொல்வது “இன்றைய படை வீரர்கள் போரில் எத்தனை வீரத்துடன் செயல்படுவார்கள் என்பது, முன்னாள் படை வீரர்களை அந்த நாடு எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்துதான் இருக்கும்”.  இன்று நம் படை வீரர்கள் வீதிக்கு வரும் நிலை வந்துவிட்டது.  அரசியல் தலைவர்கள் இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இன்றைய இந்திய ராணுவம் எதிகொள்வது நேரடி போர் இல்லை.  மறைமுக (தீவிராவாத போர்)  இதை நிறுத்த ராணுவத்தை பயன் படுத்துவது தீர்வல்ல.  நம் எதிரி நாடுகளுக்கும் இது பொருந்தும்.  இந்த சூழ்நிலையில் நமது அணுகுமுறை மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர நாட்டு பற்று கொண்ட மக்களும், நல்ல அரசியல் தலைவர்களும், தீர்வும் தான் ஒரே வழி.  ராணுவ அடக்குமுறை சமுக வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.  நமது ராணுவ வீரர்கள் இதுபோன்ற முடிவில்லாத போரில் வெறுப்பும், விரக்தியும் அடைந்து வருகிறார்கள்.  தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணம்.

காலம் மாறுகிறது.  நமது கனவுகளும் மாறுகிறது.  இந்த நூற்றாண்டில் எந்த நாடும் வேறு நாடு மீது நேரடி படை எடுக்காது.  ஆனால் மறைமுக போர், தீவிரவாத அச்சுறுத்துதல், உள்நாட்டு கலவரங்களை தூண்டி விடுதல் ஆகியவை நடக்க வாய்ப்பு உண்டு.  எனவே நமது படைகள் இதுபோன்ற நிலையை எதிர்கொள்ள நல்ல பயிற்சி கொடுக்க வேண்டும்.

நாட்டுப்பற்றை வளர்க்க அனைவர்க்கும் கட்டாய ராணுவ பயிற்ச்சியும், அதன் பின் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ராணுவ சேவையையும் கொண்டு வரவேண்டும்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...