மேம்படுத்த பட்ட ECHS கார்டு
கட்டாயம் பெற வேண்டுமா ?
(Is it compulsory to get upgraded
ECHS Card ?)
ECHS திட்டம்
01.04.2003 முதல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட்
கார்ட் வழங்கப்பட்டது. நாம் அனைவரும் இந்த
கார்டை பெற்று பழகி வரும் நிலையில் வேறு ஒரு புதிய கார்ட் வாங்க வேண்டும் என்ற
செய்தி வருகிறது. எதற்காக இந்த புதிய
கார்டு வாங்க வேண்டும் என்று தெளிவாக எங்கும் கூறப்படவில்லை.
புதிய கார்டு
ஆல் இந்தியா கார்டு என்கிறார்கள். பழைய
கார்டை யும் அப்படித்தான் சொன்னார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒரு கார்டு பெற்றுகொள்ளலாம் என்கிறது செய்தி. ஆனால் ஒவ்வொருவரும் ரூ.135/- செலுத்த
வேண்டும். கணவன், மனைவி இரு குழந்தைகள்
இருந்தால் ரூ.540 செலுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக
சில கேள்விகளை எழுப்பும் போது, ECHS
நிர்வாகம், “புதிய கார்டு தற்போதைக்கு கட்டாயம் இல்லை “ என்று கூறிவிட்டது.
புதிய
கார்டும், அதற்குரிய மென்பொருளும் (Software from SITL) முழுமையாக உபயோகத்து
வந்தால் ஒரு ECHS உறுப்பினருடைய முழு விபரமும் அதில் பதியப்படும். நோயின் தன்மை, எடுத்துகொள்ளும் மருந்துகள்,
அலர்ஜி சம்பந்தமான விபரங்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கு இந்த கார்டு மூலம்
தெரியும்.
ஆனால்
நடைமுறையில் இப்போது நடப்பது என்ன ?வெறும் டோக்கன் நம்பர் போடவும், மருத்துவ
அதிகாரிக்கு வரிசை படுத்தவே உபயோக படுத்த படுகிறது. புதிய மென்பொருள் நிறுவ பட்டதாக தெரிய
வில்லை. யாருக்கும் உரிய பயிற்சியும்
கொடுக்க வில்லை. இந்த சூழ்நிலையில் புதிய
கார்டு வேண்டும் என்று சொல்வது சரியில்லை.
பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கும் இந்த ஸ்மார்ட் கார்டுக்கு நமது ECHS நிர்வாகம்
ரூ.135 வசூலிப்பது நியாயம் இல்லை. சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் கார்டு விலை சுமார்
ரூ.25-30 க்குள் இருக்கும் என்கிறது ஒரு செய்தி.
இலவச மருத்துவ திட்டம் (பங்களிப்பு ஒரு புறம்) என்று சொல்லி, இப்படி
கட்டணங்களை வசூலிப்பது சரியில்லை.
கான்டீன் ஸ்மார்ட் வாங்குவதிலும் இதே நிலை தான். கான்டீன் ஸ்மார்ட் கார்டு ஏன் இலவசமாக
வழங்ககூடாது ?
இது தவிர சில
பாலி கிளினிக்குகள் புதிய ECHS கார்டு பெற வங்கிகளிடம் NOC வாங்கி வர நிர்பந்திக்கிறது.
சம்பத்தப்பட்ட STATION HQ இல் இது பற்றி
கேட்டபோது “நாங்கள் அவ்வாறு நிர்பந்திக்க வில்லை” என்று சொல்கிறார்கள். மேலும் மிகவும் வயதான ECHS உறுப்பினர்கள் குக்கிராமங்களில் இருந்து பெரும்
செலவு செய்து STATION HQ க்கு நேரடியாக சென்று கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
உள்ளது. அந்தந்த பாலி கிளிநிக்குகளே இந்த
விண்ணப்பங்களை பெற்று STATION HQ க்கு அனுப்புவதில் என்ன கஷ்டம் ? ஏன் இந்த பாலி கிளினிக்குகள் செய்யக் கூடாது ?
திருநெல்வேலி பாலிகிளினிக் இந்த பணியை நல்ல முறையில் செய்கிறது. Col. விக்டர் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும்
எமது பாராட்டுக்கள்.
01.04.2003 முதல் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு
மெடிக்கல் அலவன்சை நிறுத்த வேண்டிய வங்கிகள் நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது திடீரென்று
மொத்தமாக ரூ.28,000/- கட்டவேண்டும் என்று
சில பென்சனர்களை நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளன. சில பாலி கிளினிக்குகள் (ஸ்ரீவில்லி புத்தூர்)
இதற்க்கு துணை போவதாக செய்தி.
பல ஆண்டுகளாக
பல பென்சனர்களுக்கு குறைந்த பென்சன் வழங்கி பல லட்சங்களை அரியர் தொகையாக வாங்கி
கொடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு. “நாங்கள்
ஒவ்வொரு பென்சனருக்கும் சரியான பென்சன் வழங்குகிறோம் “ என்று எந்த வாங்கியாவது கூற
முடியுமா? முடியாது என்பதுதான்
உண்மை. ஏனென்றால் “எனக்கு மெடிக்கல்
அலவன்ஸ் கொடுக்காதீர்கள்” என்று பல முறை ஒரு பென்சனர் கூறியும் கண்டு கொள்ளாத
வங்கி எப்படி சரியான பென்சன் கொடுப்பதாக சான்றளிக்க முடியும். தணிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆயிரத்தில்
ஒரு பென்சனர் கணக்கை பார்த்து பிடிபட்டால்தான் தவறும் வெளிவரும். தற்போதைய நடைமுறையில் அனைத்து பென்சன் கணக்குகளையும்
தணிக்கையாளர்கள் பார்ப்பதில்லை. எனவே
தவறுகள் வெளிவர வாய்ப்பு இல்லை. எத்தனையோ பென்சனர்களுக்கு சாகும் தருவாயில் பல
லட்சம் பென்சன் அரியர் தொகை பெற்று கொடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு. இதேபோல் எத்தனையோ இராணுவ பென்சனர்களும், இராணுவ குடும்ப பென்சனர்களும் தன் வாழ் நாளில் சரியான பென்சன் பெறாமல் காலமாகிவிட்ட
நிலையும் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. நாம்
அனைவரும் விழிப்புடன் இல்லாதவரையில் இந்த நிலை மாறாது. மொத்தத்தில் எமது கோரிக்கை
என்னவென்றால் :-
1.
சம்பத்தப்பட்ட
பாலி கிளிநிக்குகளே புதிய கார்டுக்கான விண்ணப்பத்தை பெற்று Station HQ க்கு அனுப்பவேண்டும்.
2.
தவறாக
வழங்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ் தொகையை மொத்தமாக திருப்பி கட்ட எந்த வங்கியும்
நிர்பந்திக்க கூடாது. விதி முறைகளின்படி
குறைந்த தவணைகளில் வசூலிக்க வேண்டும்.
3.
முழுமையான
ECHS மென்பொருள் பயன்படுத்தும்வரை பழைய கார்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
4.
ECHS
இன் SITL Software பயிற்சி அனைவளுக்கும் வழங்கவேண்டும்.
5.
ஸ்ரீவில்லி
புத்தூர் பாலி கிளினிக் புதிய கார்டுக்கு வங்கியில் NOC கேட்டு நிர்பந்திக்க
கூடாது.
6.
சரியாக
பூர்த்தி செய்த புதிய ECHS கார்டு
விண்ணப்பங்களை உறுப்பினர்கள் Station HQ க்கு பதிவுத்தபாலில் அனுப்ப அனுமதிக்க
வேண்டும். வயதான ECHS உறுப்பினர்களை Station HQ க்கு நேரடியாக
வரச்சொல்லி நிர்பந்திக்க கூடாது.
இதை படிக்கும்
பல நல சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு இந்த கோரிக்கையை நேரில்
எடுத்து சொல்லவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
No comments:
Post a Comment