Wednesday, 29 October 2014

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய பென்சன் லோன் திட்டம்.





பாரத ஸ்டேட் வங்கியின் புதிய பென்சன் 
லோன் திட்டம்.
(அக்டோபர் 2014 முதல்)

நீங்கள் மத்திய, மாநில அரசு பென்சனராக இருந்து, பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பென்சன் வாங்குபவராக இருந்து வயது 76 க்கு மேல் ஆகாமல் இருந்தால் உங்கள் மாதாந்திர பென்சனைப்போல் 18 மடங்கு பென்சனை சில நிபந்தனைக்குட்பட்டு கடனாக பெறலாம்.

மாநில பரசு பென்சனர்களுக்கு கூடுதல் நிபந்தனை என்னவென்றால் :-

1.    மாநில அரசு பென்சனர்கள் இந்த கடன் பெறும்போது, தனது பென்சனை வேறு வங்கிக்கு மாற்ற மாட்டேன் என்ற உறுதி மொழி எழுதி கொடுக்க வேண்டும்.
2.    பென்சன் வழங்கும் ஸ்டேட் வங்கி கிளையின்  தடையில்லா சான்று (NOC) இல்லாமல் பென்சனர் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற விரும்பும் பென்சனர் விண்ணப்பங்களை ஏற்றுகொள்ள மாட்டோம் என்ற உறுதி மொழி கருவூல அதிகாரியிடமிருந்து (Treasury Officer) பெற்று வங்கியில் கொடுக்க வேண்டும்.
3.    குடும்ப பென்சன் பெற தகுதியுள்ள அவர்  மனைவிக்கு 76 வயதுக்கு மேல் ஆகாமல் இருக்க வேண்டும்.  (இது மற்ற பென்சனர்களுக்கும் பொருந்தும்)

கடன் தொகை

பென்சனர்களுக்கு:-
குறைந்த பட்சம்  ரூ.25000/-
அதிக பட்சம்  18 மாத பென்சன் கீழ் கண்ட நிபந்தனைக்குட்பட்டு.
ரூ.14 லட்சம் ---72 வயது வரை.
ரூ.12 லட்சம் ---72 வயதுக்கு மேல் 74  வயதுக்குள்.
ரூ.7.5 லட்சம் –74 வயதுக்கு மேல் 76 வயதுக்குள்.

பின் குறிப்பு:
கடனுக்கு திருப்பி கட்டும் மாத தவணையனது(EMI) நிகர பென்சனில் 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குடும்ப பென்சனர்களுக்கு:-
குறைந்த பட்சம் ரூ.25000/-
அதிக பட்சம் 18 மாத பென்சன் கீழ் கண்ட நிபந்தனைகளுடன்.
ரூ.5 லட்சம்  -- வயது 72 வரை.
ரூ.4.5 லட்சம் 72 வயதுக்கு மேல்  74 வயதுக்குள்.
ரூ.2.5 லட்சம் 74 வயதுக்கு மேல்  76  வயதுக்குள்.

பின் குறிப்பு:
கடனுக்கு திருப்பி கட்டும் மாத தவணையானது நிகர பென்சனில்  33% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

டனுக்கு பாதுகாப்பு:- (Collateral Security)
குடும்ப பென்சன் பெற தகுதியுள்ள அவர்  மனைவி கடனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது உறவினர்கள் அல்லது மூன்றாம் நபர் கடன் தொகைக்கு மதிப்புடையவர் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

திருப்பி செலுத்தும் காலம்:-
பென்சனர்களுக்கும் குடும்ப பென்சனர்களுக்கும்
72  வயது வரை  ------60  மாதம்.
72 வயதுக்கு மேல் ---48 மாதம்
74 வயதுக்கு மேல் ---24 மாதம்.

கடன் வழங்க கட்டணம் (Processing Fee)
கடன் தொகையில் 0.51% (சேவை வரி உட்பட) குறைந்த பட்சம் ரூ.250/-
(ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது )
இந்த கடனுக்கு பென்சனர் பங்கு ஏதும் இல்லை. (Margin money: Nil)

வட்டி விகிதம் தற்சமயம் : 13.5%  (மாற்றத்திற்குட் பட்டது )
இப்போது ஒரு மாநில அரசு குடும்ப பென்சனர் (குறைந்த பட்ச பென்சன் பெறுபவர்) கூடுதல் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

வயது  மாத பென்சன் கடன் தொகை  திருப்பி கட்டும் காலம்  திருப்பி கட்டும் தொகை
72             6300            90000          60  மாதம்             2070
72 – 74        6300            75000          48  மாதம்             2030
74 – 78        6300            40000          24  மாதம்             1920
ராணுவ குடும்ப பென்சனர்கள் (குறைந்த பட்ச பென்சன் பெறுபவர்)
72              7245           100000       60  மாதம்               2300
72-74           7245            85000          48  மாதம்            2310
74-76           7245            50000          24  மாதம்            2390
ராணுவ பென்சனர்கள் (குறைந்த பட்ச பென்சன் பெறுபவர்கள்)
72              9800            140000        60  மாதம்             3225
72-74           9800            110000        48  மாதம்             2980
74-78           9800            65000          24  மாதம்            3110

குறிப்பு: வயது அதிகமாகும்போது கடன் தொகையும், திருப்பி செலுத்தும் காலமும் குறையும் என்பதை அறியவும்.  தான் வாங்கும் பென்சனுக்கு எவ்வளவு கடன் பெறலாம் , எவ்வளவு பிடித்தம் செய்வார்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த பட்டியல் கொடுக்க பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் கடன் தொகைக்கு 5 வருடத்தில் திருப்பி கட்ட நீங்கள் செலுத்தும் வட்டி ரூ.38000/-
எனவே முக்கியமான காரணங்களுக்கு மட்டும் கடன் வாங்கவும்.  கண்டிப்பாக திருப்பி கட்டவேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது.
76 வயதான ஒருவருக்கு 7.5  லட்சம் கடன் கொடுக்கும் வங்கியை பாராட்டாமல் இருக்கமுடியாது.
அவ்வபோது கையில் அதிக பணம் இருக்கும் பொது கடன் கணக்கில் கட்டி கடனை சீக்கிரம் முடித்தால்  வட்டி குறையும் என்பதை அறியவும்.
கடன் வாங்கி ஒரு வருடம் ஒழுங்காக திருப்பி கட்டிய பின் சில நிபந்தனைகளுடன் இரண்டாவது கடன் பெறவும் வசதி உள்ளது என்பதை அறியவும்.  (Top up pension loan fecility)
வங்கிக்கு கடன் கேட்க செல்லும் முன் இந்த விவரங்களை நன்கு படித்து புரிந்துகொண்டால் நல்லது.  தெரிந்து வைத்து கொள்வது ஒரு சிறந்த ஆயுதமாக சில சமயங்களில் உதவும்.

வாங்கும் கடனை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்கையில் முன்னேற எமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...