சுய விருப்பத்தின் அடிப்படையில் டிச்சார்ஜில் வந்தவர்களுக்கு இயலாமை பென்ஷன்
(Disability pension for those who have been discharged on premature
retirement)
01.01.1996 க்கு முன்னர் இயலாமை அடைந்து சுய விருப்பத்தின்
அடிப்படையில் டிஸ்சார்ஜில் வந்தவர்களுக்கு இயலாமை பென்ஷன் மறுக்கப்பட்டது.
ஆனால் இதே போன்று 01.01.2006 க்கு பின்னர் டிஸ் சார்ஜில்
வருபவர்களுக்கு இயலாமை பென்சன் வழங்கலாம் என MOD letter
No.16(5)/2008/D(Pen/Policy) dt.29.9.2009 கூறுகிறது.( CDA Circular No.433
dt.25/3/2010) இந்த வரையறுக்கப்பட்ட ஒரு தேதி முதல் மறக்கப்பட்ட பயனை எதிர்த்து AFT
யிலும் உச்ச நீதி மன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டு இப்போது 01.01.1996 க்கு
முன்னதாக இயலாமையின் காரணமாக சுய விருப்பத்தில் டிஸ் சார்ஜில் வந்தவர்களுக்கும்
இயலாமை பென்சன் வழங்கலாம் என நிலை வந்துள்ளது.
இது சம்பந்தமாக எந்த அரசாணையும் இன்னும் வரவில்லை என்ற
போதிலும், விரைவில் வரும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம்
செல்லாமல் தங்கள் ரெகார்ட் அலுவலகத்துக்கு உடனே இயலாமை பென்சனுக்கான விண்ணப்பம்
அனுப்பலாம்.
01.01.2006 க்கு பின்னர் வந்தவர்களுக்கு பல சலுகைகளை
வழங்கும் அரசு இந்த தேதிக்கு முன்னால் வந்தவர்களை மறந்து விடுகிறது. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ? இந்த நிலை மாறவேண்டும்.
No comments:
Post a Comment