ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்
நமது முப்படைகளின் தலைமை அலுவலகம் 01.04.2014
முதல் நமக்கு பரிந்துரை செய்துள்ள இந்த பென்சன் பட்டியல் கடந்த ஒன்பது
மாதங்களாக அரசின் பரிசீலனையில் உள்ளதாக சொல்லபடுகிறது. “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க
விடமாட்டார் “ என்ற நிலைமை இப்போது இருக்கிறது.
அதிகாரிகள் வர்க்கம் நமக்கு எதிராக பொய்யான கணக்குகளை சொல்லி
அமைச்சர்களையும் நமது பிரதமரையும் குழப்பி வருகிறது.
இதற்கு தீர்வு காண IESM என்ற நமது சங்கம் 01.02.2015 அன்று டெல்லியில்
ஜந்தர் மந்தரில் ஒரு பெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
அனைத்து முன்னாள் இராணுவத்தினரும் அவர் தம் குடும்பத்தினரும் திரளாக கலந்து
கொண்டு நமது போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும். நாட்டை காத்த வீரர்களின் நலன் காக்க நாம் ஒன்று
பட்டு போராடும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதை உணர வேண்டும்.
நமக்கு நமது தலைமை அலுவலகம் பரிந்துரை செய்த பென்சன் தொகை இதுதான் :-
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த சிப்பாய்க்கு Rs.8,365
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த நாயக் க்கு Rs.8,760
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தஹவில்தாருக்கு Rs.9,390
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த நயப் சுபெதாருக்கு Rs.11,635
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த சுபெதாருக்கு Rs.12,355
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த சுபேதார் மேஜருக்கு Rs.12,800
33 ஆண்டுகள் சர்விஸ் முடித்த ஆனரரி லெப்டினென்ட் Rs.16,160
33 ஆண்டுகள் சர்விஸ் முடித்த ஆனரரி கேப்டன்
Rs.17,905
குடும்ப பென்சன்
சிப்பாய் மனைவிக்கு :5646
நாயக் மனைவிக்கு :5838
ஹவில்தார் மனைவிக்கு :5958
நயப் சுபேதார் மனைவிக்கு :7707
சுபேதார் மனைவிக்கு :9009
சுபேதார் மேஜர் மனைவிக்கு :9612
ஆனரரி லெப்டினென்ட் மனைவிக்கு :10278
ஆனரரி கேப்டன் மனைவிக்கு :10743
80 சதவீதம் வரை கொடுக்க முடியும் என்று நமது பாது காப்பு அமைச்சர்
கூறியிருப்பதாக செய்து வந்துள்ளது. இதன்
முழு விபரம் தெரிய வில்லை. வரும் பட்ஜெட் அறிக்கைக்கு முன்னதாக கொடுத்து விடுவதாகவும்
கூறியிருக்கிறார்.
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.
உங்கள் அனைவருக்கும் எமது இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகிற 2015 ம்
ஆண்டு உங்கள் வாழ்கையில் எல்லா நலன்களையும் அள்ளி தர வேண்டுகிறேன்.
OROP நமக்கு நிச்சயம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் நாம் செயல் படுவோம்.
இந்த அரசு நம்மை கைவிடாது.
நம்பிக்கை கொள்வோம்.
ஜெய் ஹிந்த்
வாழ்க பாரதம்
வளர்க நம் ஒற்றுமை