ஜீவன் பிரமாண்
டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்
DIGITAL LIFE CERTIFICATE
நமது பிரதமர் அவர்கள் கடந்த 10.11.2014 அன்று தொடங்கி வைத்த “ஜீவன் பிரமாண்”
திட்டத்தின் முழு விவரங்களும் கீழ் கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நவீன தகவல் தொழில் நுட்பத்தில் நாம் கொண்டுள்ள செயல்
திறைமையால்
தொலைநோக்கு நோக்கம் கொண்டு உலகின் சிறந்த இந்திய
மென் பொருள் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட
“ஆதார்”
ஒரு சாதாரண மனிதனின் அடையாளமாக,
125 கோடி மக்களையும் அடையாளம் காணும்
ஒரு சிறந்த மென்பொருளை அடித்தளமாக கொண்டு
உருவாக்கப்பட்டதுதான் இந்த
“ஜீவன் பிரமாண்”
இனி மத்திய மாநில அரசு பென்சனர்கள் ஒவ்வொரு ஆண்டும்
நவம்பர்
மற்றும் ஏப்ரல்
மாதங்களில் வங்கிக்கோ அல்லது மாவட்ட கருவூலதிர்க்கோ
நேரில் சென்று
வாழ்க்கை சான்றிதழ் (Life Certificate) வழங்க
வேண்டியதில்லை.
தங்கள் வீட்டில் உள்ள கணிப்பொறி மூலமோ அல்லது தங்கள்
சொந்த அண்ட் ராய்டு மொபைல் மூலமோ அல்லது அருகிலுள்ள
இன்டர்நெட் சேவை மையம் மூலமாகவோ அல்லது ஒரு சில அரசு
அலுவலககங்கள் மூலமாகவோ வரும் காலங்களில் உங்கள்
வாழ்க்கை
சான்றிதழை பதிவு செய்யலாம். இந்த திட்டத்தால் சுமார்
ஒரு கோடி பென்சனர்கள் பயன் பெறுவார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையானவை
ஆதார் அடையாள அட்டை
பென்சன் ஆணை எண்.
வங்கி சேமிப்பு கணக்கு எண்.
வங்கி பெயர், கிளை
உங்களுடைய மொபைல் போனும்
அதன் எண்ணும்.
(அண்ட் ராய்டு போனாக இருந்து அதனுடன் கைரேகை
பதியும் கருவியும் இருந்தால், இதை வைத்தே நீங்கள்
அனைத்து
பணிகளையும் வீட்டிலிருந்தே முடித்து விடலாம்.)
ஒரு சேவை மையம் மூலமாக செய்வதானால் மேற்கூறியவற்றை
எடுத்து சென்று, உங்கள் கை ரேகையோ அல்லது கண் விழி
பார்வையோ ஸ்கேன்
செய்யப்பட்டு, இணைய தளத்தில் சரிபார்க்கப்பட்டு
உங்களுக்கு வாழ்க்கை சன்றிதால்
அச்சிட்டு வழங்கப்படும். நீங்கள் வங்கிக்கு செல்லாமலே இதே இணைய
தளத்தில் இருந்து உங்கள் உயிர் சான்றிதழை பெற்று
கொள்வார்கள்.
மேற்குறிப்பிட்ட இணைய தளத்தை கொஞ்சம்
முயற்சி செய்து திறக்கவும்.
ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு
"ஜீவன் பிரமாண்" சான்று வழங்குவது
எளிமையக்கபட்டு விட்டது.
இதே போல் ஒருவர் உயிரோடு இல்லை என்பதற்கு
இதேபோல் எளிமையான சான்றளிக்கும்
முறை கொண்டுவரப்படுமா ?
செயல் படுத்த சிந்திபீர்
No comments:
Post a Comment