Saturday, 1 June 2013

இரண்டாவது குடும்ப பென்சன்





இரண்டாவது குடும்ப பென்சன்.

இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க மத்திய அரசு ஆணைகள் வெளியிட்டு சுமார்  நான்கு  மாதங்கள் ஆகியும் ஒருவர் கூட அதை பெற்றதாக தெரியவில்லை.

ஒரு குடும்ப தலைவர் இறந்தபின் அந்த விதவையின் கோரிக்கைகளை கேட்க யாரும் தயாராக இல்லை.  இறந்து போன ஒரு முன்னாள் படை வீரருடன் பணிபுணிந்த உற்ற நண்பர் கூட இவர்களுக்கு உதவ முன் வருவது இல்லை.  இவர்கள் பணிபுணிந்த அலுவலகங்களில் இந்த விதவைகளின் விண்ணப்பங்களை யாரும் பரிவுடன் பரிசீலிப்பதில்லை.

இரண்டு பென்சன் வாங்கி வந்த என் நண்பர், தன் மரணத்திற்குப்பின் இரண்டு குடும்ப பென்சனும் தன் மனைவிக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து அரசு ஆணைகளை தன் மனைவி கையில் கொடுத்து இறந்துவிட்டார்.  அவர் இறந்த நாள் 31.01.2012 இன் படி அவர் மனைவிக்கு இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க எந்த தடையும் இல்லை.  இருந்தும் கடந்த நான்கு மாதங்களாக இரண்டாவது பென்சன் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  ஏன் என்று தெரியவில்லை.  என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று இந்த வயதான விதவைகள் தினமும் ஏங்கிக்கொண்டிர்க்கின்றனர். 

மழை நின்ற பின்னும் தூறல் விடவில்லை என்பது போல் அரசாணைகள் வந்த பின்னரும் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது அலுவலக நடைமுறைகள்.  இதற்க்கு என்னதான் தீர்வு ?

முன்னாள் இராணுவத்தினர் நல சங்கங்கள் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். 

1 comment:

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...