Saturday, 2 March 2013

காலம் கடந்த பென்சன் நிலுவை தொகை



காலம் கடந்து வழங்கப்படும் பென்சன் நிலுவைத்தொகை
(Delayed payment of pension arrears due negligence of banks)

விஞ்ஞான வளர்ச்சியால், வங்கிகளுக்கும் பென்சனர்களுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பு மிகவும் குறைந்து வருகிறது.  சக பென்சனர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் குறைந்து வருகிறது.  கிராமங்களில் நிலைமை வேறு.  வயதான பென்சனர்கள் மற்றவர் உதவியின்றி தனது மாத பென்ஷனை பெறுவது கடினம்.  இவர்கள் பென்சன் வாங்கும் பின்னணி யாருக்கும் தெரிவதில்லை.

அந்தக்காலத்தில் மக்களுக்கு எழுத்தறிவு குறைவாக இருந்த போதிலும், நீதி, நேர்மை நிறைந்த நிர்வாகம் இருந்தது.  எழுத தெரிந்தவர்கள் ஆவணங்களை முறையாக, முழுமையாக எழுதி வைத்ததின் பயனாக பயனாளிகள் காலம் காலமாக முழு பயனையும் பெற  ஏதுவாக இருந்தது.

ஆனால் இன்று நிலைமை வேறு.
(எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கு இதோ ஓர் எடுத்துகாட்டு)

எண்.6779693 சிப்பாய். கடற்கரை என்பவர் இராணுவ மருத்துவ பிரிவில் (AMC)  பணியாற்றி வந்தார்.  திடீரென்று 07.12.1963  அன்று அவர் இறந்து விட்டதாக செய்தி வருகிறது.  அவர் மனைவி திருமதி. சித்திரை அம்மாவுக்கும், நான்கு குழந்தைகளுக்கும் விசேஷ குடும்ப பென்சன் வழங்க ஆணைகள் அனுப்பி 08.12.1963 முதல் பெற்றுக்கொள்ள வகை செய்தது  அன்றைய இராணுவ அமைச்சகம்.  1963 ல் ரூ.20 ஆக இருந்த இந்த பென்சன் இன்றைய
தேதியில் (50  ஆண்டுகளுக்கு பிறகு) ரூ.7000 ஆகி இருக்கிறது.  
 படிப்படியாக உயர்ந்த இந்த பென்ஷனை அவ்வப்போது 
சரியாக வழங்காத காரணத்தால்

இப்போது புகார் செய்து அதை பெரும் நிலை உள்ளது.  
 காலம் கடந்த புகார்களை பரிசீலிப்பதில் பல சிக்கல்கள் உள்ளதால்,
ஏதோ ஓரளவுக்குத்தான்

நிலுவை தொகையை பெறமுடிகிறது என்பது கசப்பான உண்மை.

இப்படி ஒரு சிக்கலான நிலைமையில் தள்ளபட்டவர்தான் திருமதி. சித்திரை அம்மாள். ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து வந்த இந்த விதவை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அருகிலுள்ள திருநெல்வேலி நகரத்துக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வாடகை காரில் தன் மகளுடன் வங்கிக்கு வந்து பென்ஷனை பெற்று சென்றார்.  சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மாத பென்சன் பெற வேண்டிய இவருக்கு பல ஆண்டுகளாக வெறும் ஐயாயிரம் வரை மட்டுமே வழங்கப்பட்டது.   வங்கியில் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.  ஒரு நாள் என் நண்பர் ஒருவர் இவர்களை சந்திக்கும்போது உண்மை அறிந்து என்னிடம் வந்து கூறினார்.

உடனே பணியில் இறங்கியது எமது எக்ஸ் வெல் அறக்கட்டளை.  இவருடைய பென்சன் ஆவணங்கள் சரியாக எழுதப்பட்டிருந்ததால்  வங்கி மேல் அதிகாரிகளுக்கு முறையாக புகார் அனுப்பி பெரும் முயர்ச்சிக்குப்பின்
கடந்த 02.03.2013  அன்று சுமார் 6.75 லட்சம் வரை பென்சன் நிலுவை தொகை கொடுக்கப்பட்டது.

ஒரு பென்சனருக்கு காலா காலத்தில் கொடுக்க வேண்டிய சரியான பென்ஷனை கொடுக்காமல் காலம் கடந்து கடைசி கட்டத்தில் 
அந்த விதவை
சுய நினைவில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது கொடுப்பது மிகவும் கொடுமையானது என்பது இனியாவது 
வங்கிகள் உணரவேண்டும்.
வங்கிகள் வளர்ந்துள்ள அளவுக்கு அதன் சேவை தரம் 
உயரவில்லை என்பது
கசப்பான உண்மை.  வங்கி மேல் மட்ட நிர்வாகிகள் 
இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

   நடந்தது நல்லதாகவே இருக்கட்டும்.   
 எமது முயற்ச்சிக்கு முழு ஆதரவு
அளித்த  யூனியன் வங்கி  மும்பை தலைமை அலுவலகத்தில் உள்ள
திருமதி. ஆஷா ஷர்மா (Smt. Asha Sharma, Grievances officer, Union Bank of India, Mumbai), மதுரை மண்டல அலுவலகத்தில் உள்ள திரு.பழனிகுமார்,
மற்றும் திருநெல்வேலி யூனியன் வங்கி கிளை மேலாளர்
திரு.V. ஐகோடு அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறோம்.

ஒரு சில புகை படங்களை உங்கள் பார்வைக்கு இதோ 
87 வயதான திருமதி.சித்திரை அம்மாள் (விதவை ) லட்சங்களை  அனுபவிக்கும் வயதா  இது ?

தனது மகள் மற்றும் பேத்தியுடன்

மறு மணம் செய்யாமல்  இருக்க பச்சை குத்திய கொடுமை

யூனியன் பேங்க் மேனேஜர் திரு V.ஐகோடு, சித்திரை மகள், அறகட்டளை நிர்வாகிகள்

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...