Wednesday, 6 July 2016

முப்படை வீரர்களின் குழந்தைகளுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் கல்வி உதவித்தொகை





முப்படை வீரர்களின் குழந்தைகளுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் கல்வி உதவித்தொகை
(SCHOLARSHIPS FROM KENDRIYA SAINIK BOARD)

சிப்பாய், நாயக் மற்றும் ஹவில்தார் அதற்க்கு சமமான மற்ற படை வீரர் குழந்தைகளுக்கும்  அவர்தம் விதவைகளுக்கும் முதல் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை நிதி உதவி வழங்கப்படும்.


2011 முதல் இந்த நிதி உதவி இரண்டு குழந்தைகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கப்படுகிறது.  விதவைகளுக்கு PG படிப்புக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

தகுதி:
1.   விண்ணப்பதாரர் முன்னாள்படை வீரராகவோ அல்லது அவர்தம் விதவையாகவோ அல்லது அவர்தம் அநாதை குழந்தையாகவோ இருக்கவேண்டும்.

2.    ஹவில்தார் பதவிக்கு குறைந்த வர்களாக இருக்க வேண்டும்.

3.    குழந்தை முந்தய வகுப்பில் தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

4.    வேறு எங்கிருந்தும் நிதி உதவி பெற கூடாது.

5.    மாவட்ட சைனிக் போர்டால் சிபாரிசு செய்யப்படவேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

1.    முழு டிஸ் சார்ஜ் புக் நகல்.

2.    அடையாள அட்டை.

3.    முந்தய வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்று.

4.    குழந்தையின் பெயர் டிஸ் சார்ஜ் புக் இல் இருக்க வேண்டும் அல்லது பார்ட் II ஆர்டர் இருக்க வேண்டும்.

5.    வேறு யாரிடமும் நிதிஉதவி பெறவில்லை என்ற சான்று.

6.    வங்கி கணக்கு விபரம். (பாரத ஸ்டேட் வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கியில் மட்டும் கணக்கு இருக்க வேண்டும்)

7.    ஆதார் அட்டை நகல்.



ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 31 க்குள்ளும் 10 முதல் 12 வரை ஜூலை 31 க்குள்ளும், கல்லூரி படிப்புக்கு ஆகஸ்ட் 31 க்குள்ளும் விண்ணப்பங்களை  இணைய தளம் மூலம் சமர்பித்து அதன் நகலை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகத்தில் மறு நாள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவேண்டும். இந்த நிதி உதவிக்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1000 வீதம் இரண்டு குழந்தை இருந்தால் ரூ.24000 நடப்பு ஆண்டு முடியும் முன் தங்கள் வங்கி கணக்கில் வந்து விடும்.



அனைத்து பணிகளும் இணையம் மூலம் நடைபெறுவதால் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும்.  விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் நீட்டிக்க பட்டுள்ளதாக செய்தி உள்ளது. முழு விபரமும் கீழ் கண்ட இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம்.  உதவி இயக்குனர் அலுவலகத்தையும் அணுகவும். நெல்லை மாவட்ட உதவி இயக்குனர் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள் இந்த பணியை மிகவும் சிறந்த முறையில் செய்வதை அறிந்து அவருக்கு எமது பாராட்டுக்கள்.


மேலும் உதவிக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகலாம்.





No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...