Wednesday, 27 July 2016

பிரதமரின் ஸ்காலர் ஷிப் திட்டம்




பிரதமரின் ஸ்காலர் ஷிப் திட்டம்

(Prime Minister’s Scholarship Scheme)

கடந்த ஆண்டு இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (2015-16) இரண்டாம் ஆண்டு புதுப்பிப்பதற்கு (For Renewal) 1.6.2016 முதல் www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் புதுப்ப்பிக்க வேண்டும்.

முன்னதாக பேப்பர் மூலம் புதுப்பிக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்கள் மறுபடியும் ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.


மேலும் 2016-17 ஆண்டுக்குரிய முதலாம் ஆண்டு ஸ்காலர் ஷிப் பற்றிய விளம்பரம் ஆகஸ்ட் 2016 இல் செய்தித்தாள்களிலும் ksb இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு தேர்வு பெற்றவர்கள் கீழ் கண்ட சான்றிதழ்களுடன் அவசியம் ஆன்லைன் மூலம் புதுப்பிப்பதற்கு (For Renewal)  விண்ணப்பிக்க வேண்டும்.

1.     கல்லூரியிலிருந்து பெறப்பட்ட “உண்மை சான்றை” (Bonafide Certificate) ஒரிஜினலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். (Click here for BonafineCertificate)

2.    பரீட்சையில் தேர்வான சான்றிதழை விண்ணப்ப தாரரே கையொப்பமிட்டு அனுப்பவேண்டும். (Click here for Exam.Certificatre)

3.    வங்கியில் ஆதார் எண்ணை லிங்க் செய்த சான்றையும் அனுப்ப வேண்டும்.(Click here for linkingcertificate)

4.    இரண்டு செமஸ்டர் தேர்வுகளின் மார்க் சீட்டையும் அனுப்பவேண்டும்.

5.    வங்கி பாஸ் புத்தகத்தை ஸ்கேன் செய்து அல்லது உங்கள் பெயர் அச்சிடப்பட்ட காசோலை ஒன்றை கேன்சல் செய்து அதை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.

6.    விண்ணப்ப தாரரின் ஆதார் அட்டையையும் ஸ்கேன் செய்து அனுப்பவேண்டும்.


இது பற்றிய மேலும் உதவிக்கும், தகவலுக்கும்:



எக்ஸ் வெல் அறக்கட்டளை

தொலை பேசி: 0462-2575380.

15G மிலிடரி லைன், சமாதானபுரம்,

பாளையம்கோட்டை. 627002.

Thursday, 21 July 2016

ஆறாவது ஊதிய கமிசனில் உள்ள குறைபாடுகள்



 
இவர்களுக்கு உரிய அரியர் தொகையை நீங்கள்தான் பெற்று கொடுக்கவேண்டும் 
ஆறாவது ஊதிய கமிசனில் உள்ள குறைபாடுகள்
ஆறாவது ஊதிய கமிசனின் பரிந்துரைகளை சரியாக அமுல் படுத்தாததால் ராணுவ பென்சனர்களுக்கு மிகுந்த பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.   கடந்த பத்து ஆண்டுகளில் பென்சனர்கள் நீதிமன்றங்கள் மூலமாக கிடைத்த  நல்ல தீர்ப்பின் பலனாக ஒரு சில அரியர் தொகை கிடைக்கும் தருவாயில் உள்ளனர்.

பெரும்பாலான ராணுவ பென்சனர்கள் 33 ஆண்டுகள் சேவை செய்ய அனுமதிக்கபடுவதில்லை.இந்த சூழ்நிலையில் அவர்கள் பென்சன் கணக்கீட்டில் மட்டும் இந்த 33 வருட சேவை நிபந்தனையை புகுத்தி அவர்களுடைய பென்சனை விகிதாசார முறையில் (Reduced their pension on Pro-rata basis) குறைத்து வழங்கி வந்தது அரசு.  இது முற்றிலும் நியாய மற்றது என உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார் ஒரு சாதாரண முன்னாள் படை வீரர்.  அவர் கண்ட வெற்றிதான் இன்று அனைவரும் எதிர்பார்க்கும் 33 வருட முழு பென்சன். (De linking of 33 years for full pension issue)


ஒரு ராணுவ பென்சனர் நியாயமான முழு பென்சன் பெற இந்த அரசு அனுமதித்திருந்தால், அவர் 65  வயதுக்கு முன்னதாக மரண மடைந்தபோது, அவர் மனைவிக்கும் முழு பென்சன் வழங்கப்பட்டிருக்கும்.  ஆனால் நடந்தது என்ன ? இந்த முழு பென்சன் அவருக்கும் வழ ங்கப்படவில்லை, அவர் மனைவிக்கும் கொடுக்கப்படவில்லை.  ஒரு சில சமயங்களில் பென்சனில் சில மாற்றங்கள் வரும்போது, அதன் பயன் அவர் இறந்த பின் அவர் மனைவிக்கு மறுக்கப்பட்டது.  கேட்பார் யாருமில்லாத காரணத்தால் இந்த விதவைகளுக்கு நியாயமான பென்சன் மறுக்கப்பட்டது. 

சாதாரணமாக  பென்சன் விதிகளின் படி ஒருவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் சரி பாதி பென்சனாக வழங்கப்படவேண்டும்.  ஆனால் ராணுவ பென்சனர்களுக்கு மட்டும் இந்த விதி மாற்றப்பட்டு பென்சன் குறைக்கப்பட்டது.  இது மாபெரும் அநீதி என நிரூபிக்கப்பட்டு அனைத்து ராணுவ பென்சனர்களுக்கும் ஒரு கணிசமான தொகை ஆரியராக கிடைக்க உள்ளது.  (Arrears of enhanced pension from 1.1.2006) இதற்குரிய அரசாணையை வெளியிடுவதை ஏனோ தாமதபடுத்துகிறது அரசு.  காரணம் புரியவில்லை.


தற்போது 65 வயதுக்கு முன்னதாக மரணமடைந்த ராணுவ பென்சனர்களின் மனைவிக்கு வழங்கப்பட்ட குறைந்த பென்சனை சரி செய்து முழு பென்சன் வழங்க அரசாணைகள் வெளி வந்துள்ளது.  இதன் படி 2002 முதல் 2012 இக்குள் மரணமடைந்த ராணுவ பென்சனர்களின் மனைவிக்கு முழு பென்சனுக்குரிய அரியர் தொகை கிடைக்கும். 

ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கோரிக்கை விடுத்தால்தான் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கூடுதல் குடும்ப பென்சன் அரியர் தொகை உரியவர்களுக்கு எழிதாக கிடைக்க (Arrears of enhanced Family pension for the period from 1.1.2006 to 23.9.2012) எங்கள் இணைய தளத்தில்  www.exweltrust.in  விரைவில் வசதி செய்து கொடுக்கப்படும்.  தினமும் எங்கள் இணைய தளத்தை www.exweltrust.in பார்க்கவும். 

உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.

Wednesday, 6 July 2016

முப்படை வீரர்களின் குழந்தைகளுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் கல்வி உதவித்தொகை





முப்படை வீரர்களின் குழந்தைகளுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் கல்வி உதவித்தொகை
(SCHOLARSHIPS FROM KENDRIYA SAINIK BOARD)

சிப்பாய், நாயக் மற்றும் ஹவில்தார் அதற்க்கு சமமான மற்ற படை வீரர் குழந்தைகளுக்கும்  அவர்தம் விதவைகளுக்கும் முதல் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை நிதி உதவி வழங்கப்படும்.


2011 முதல் இந்த நிதி உதவி இரண்டு குழந்தைகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கப்படுகிறது.  விதவைகளுக்கு PG படிப்புக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

தகுதி:
1.   விண்ணப்பதாரர் முன்னாள்படை வீரராகவோ அல்லது அவர்தம் விதவையாகவோ அல்லது அவர்தம் அநாதை குழந்தையாகவோ இருக்கவேண்டும்.

2.    ஹவில்தார் பதவிக்கு குறைந்த வர்களாக இருக்க வேண்டும்.

3.    குழந்தை முந்தய வகுப்பில் தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

4.    வேறு எங்கிருந்தும் நிதி உதவி பெற கூடாது.

5.    மாவட்ட சைனிக் போர்டால் சிபாரிசு செய்யப்படவேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

1.    முழு டிஸ் சார்ஜ் புக் நகல்.

2.    அடையாள அட்டை.

3.    முந்தய வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்று.

4.    குழந்தையின் பெயர் டிஸ் சார்ஜ் புக் இல் இருக்க வேண்டும் அல்லது பார்ட் II ஆர்டர் இருக்க வேண்டும்.

5.    வேறு யாரிடமும் நிதிஉதவி பெறவில்லை என்ற சான்று.

6.    வங்கி கணக்கு விபரம். (பாரத ஸ்டேட் வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கியில் மட்டும் கணக்கு இருக்க வேண்டும்)

7.    ஆதார் அட்டை நகல்.



ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 31 க்குள்ளும் 10 முதல் 12 வரை ஜூலை 31 க்குள்ளும், கல்லூரி படிப்புக்கு ஆகஸ்ட் 31 க்குள்ளும் விண்ணப்பங்களை  இணைய தளம் மூலம் சமர்பித்து அதன் நகலை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகத்தில் மறு நாள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவேண்டும். இந்த நிதி உதவிக்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1000 வீதம் இரண்டு குழந்தை இருந்தால் ரூ.24000 நடப்பு ஆண்டு முடியும் முன் தங்கள் வங்கி கணக்கில் வந்து விடும்.



அனைத்து பணிகளும் இணையம் மூலம் நடைபெறுவதால் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும்.  விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் நீட்டிக்க பட்டுள்ளதாக செய்தி உள்ளது. முழு விபரமும் கீழ் கண்ட இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம்.  உதவி இயக்குனர் அலுவலகத்தையும் அணுகவும். நெல்லை மாவட்ட உதவி இயக்குனர் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள் இந்த பணியை மிகவும் சிறந்த முறையில் செய்வதை அறிந்து அவருக்கு எமது பாராட்டுக்கள்.


மேலும் உதவிக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகலாம்.





Sunday, 3 July 2016

அரியர் தொகைக்கு பிடித்தம் செய்த வருமான வரி




அரியர் தொகைக்கு பிடித்தம் செய்த வருமான வரி

சமீபத்தில் பல ராணுவ பென்சனர்களுக்கு குறிப்பாக ஜெசிவோ, ஆனரரி ஆபிசர்களுக்கு வருமான வரி சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  உண்மையில் இவர்கள் இவ்வளவு வரி கட்டவேண்டியது இல்லை. அரியர் தொகை ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற அளவில் கிடைத்ததாலும், அறியாமையின் காரணமாக பான் கார்டை வங்கியில் முன் கூட்டியே பதியாத காரணத்தாலும் இவர்களுக்கு கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவும்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கியில் வரி பிடித்தம் செய்ததற்கான படிவம் 16 (Form 16) பெற்று, அதனுடன் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரையிலான பென்சன் ஸ்டேட் மென்ட் பெற்று அதனுடன் பான் கார்டையும் இணைத்து ஒரு ஆடிட்டரிடம் கொடுத்து கூடுதலாக பிடித்தம் செய்த வரியை திரும்ப பெறலாம்.  அரியர் தொகைக்குரிய தனிப்பட்ட கணக்கையும் ஆடிட்டரிடம் கொடுக்க வேண்டும்.  (Yearly Break up of arrears).

வருகிற ஜூலை 31 ம் முன்னதாக உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும்.  உங்களுக்கு சுமார் ரூ.25000 வரை (Hon.Capt) பிடித்தம் செய்த வரி ஆகஸ்ட் மாதம் திருப்பி கிடைக்கும்.

இது பெற்றிய உதவி தேவைப்படுவோர் எங்கள் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம். தொலை பேசி 0462-2575380.

ஒவ்வொருவருக்கும், ஒரு கைபேசியும், பான் கார்டும், ஆதார் கார்டும் அவசியம் தேவை.

85 வயதான ஒரு ஆனரரி கேப்டனுக்கு ரூ.60 ஆயிரம் வரி பிடித்தம் செய்திருந்தார்கள். அவர் எங்களிடம் வந்ததின் காரணமாக அவருக்கு ரூ.30000 திருப்பி கிடைக்க வேண்டிய உதவி செய்திருக்கிறோம்.



எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...