தமிழ் பேசும் முன்னாள், இந்நாள்படை வீரர்களின் நல்வாழ்வுக்கான ஓர் வலை பதிவு. நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்கத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்துவிடும். "தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம் வந்துவிட்டது. அவசியம் படிக்கவும்.
Saturday, 31 December 2016
Saturday, 10 December 2016
எக்ஸ் வெல் அறக்கட்டழையின்11 ஆவது ஆண்டு விழா
18.12.2016
அன்று சாந்தி நகரில் உள்ள
மணி
மஹாலில் வைத்து நடை பெரும்.
அவ்வமயம்
கல்வியில் சிறந்து விளங்கும்
நமது
முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு
பரிசுகள்
வழங்கப்படும்.
எனவே கடந்த
2016 ம் ஆண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் 400 மற்றும் 1000 மதிப்பெண்கள்
பெற்ற மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் விண்ணப்பங்களை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன்
மதிப்பெண் சான்றிதழ், படை விலகல் சான்றிதழ் மற்றும் ஒரு புகைப்படமும் இணைத்து 14.12.2016 க்குள் அனுப்பவும்.
முகவரி
எக்ஸ் வெல்
அறக்கட்டளை
3D/4 புனித
மார்க் தெரு,
புனித
ஜான்ஸ் பள்ளி சாலை,
சமாதானபுரம்,
பாளையம்கோட்டை
திருநெல்வேலி
627002.
தொலைபேசி.0462-2575380
நல்ல பல நிகழ்சிகள் உண்டு.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும்.
உங்கள் வருகையை எங்களுக்கு தொலைபேசி மூலம்
தெரிவிக்கவும்.
தொலைபேசி: 0462-2575380, 9894125019
அனைவருக்கு மதிய உணவு உண்டு.
Tuesday, 6 December 2016
Wednesday, 2 November 2016
ராணுவ பென்சனர்களுக்கான ஏழாவது ஊதிய கமிசன் அரசாணைகள்
ராணுவ பென்சனர்களுக்கான ஏழாவது ஊதிய கமிசன் அரசாணைகள்
29.10.2016 அன்று வெளி வந்து விட்டது.
இதன் பயன்கள் 1.1.2016 அமுல் படுத்தப்படும்.
முக்கிய அம்சங்கள்
1. குறைந்த பட்ச பென்சன் /குடும்ப பென்சன் Rs.9,000/-
2. அதிக பட்ச குடும்ப பென்சன் Rs.75000/-
3. அதிக பட்ச பென்சன் Rs.1,25,000/-
4. 15 வருட சர்விஸ் முடித்த ஒரு Y குரூப் சிப்பாய்க்கு ரூ.17130 பென்சன் கிடைக்கும்.
5. பஞ்சப்படி 1.7.2016 முதல் 2 % வழங்கப்படும்.
6. இயலாமை பென்சன் இன்னும் மாற்றி அமைக்க படவில்லை.
7. இயலாமை பென்சனுக்கு இனி அடிசனல் பென்சன் கிடையாது.
8. மறு வேளையில் இருப்பவர்களுக்கு தற்போதைய அடிப்படை பென்சனில் 2.57 அதிகரித்து வழங்கப்படும்.
9. இந்த அரியர் தொகை வாங்கும் முன்னதாக ஒரு பென்சனர் இறந்து விட்டால் இந்த தொகை அவர் மனைவிக்கு வழங்கப்படும்.
10. குறைந்த பட்ச அரியர் தொகை ரூ.12800 இந்த மாதம் வழங்கப்படவேண்டும்.
oOo
அறிவிப்பு
ராணுவ பென்சனர்களுக்கு பலவிதமான அரியர் தொகை கொடுக்க
அரசாணைகள் வந்துள்ளது. அவற்றை தெரிந்துகொள்ள
எங்கள் இணைய தளத்தை பார்க்கவும்.
அல்லது எக்ஸ் வெல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 04622575380
முகவரி
15G மிலிடரி லைன், சமாதானபுரம், திருநெல்வேலி -2.
Friday, 28 October 2016
Tuesday, 25 October 2016
கூடுதல் குடும்ப பென்சன் நிலுவை தொகை வழங்க வகை செய்யும் CDA சர்குலர் 567
விழிப்புடன் இருக்க வேண்டும்
கூடுதல் குடும்ப பென்சன்
நிலுவை தொகை வழங்க வகை செய்யும் CDA சர்குலர் 567
(Payment
of Arrears of Enhanced rate of Ordinary Family pension CDA Cir.567)
ஒரு பென்சனர் 65/67 வயதுக்கு முன்னதாக இறந்துவிட்டால்
அவர் மனைவிக்கு அவர் இறந்த மறு நாள் முதல் அவரது 65/67 வயது வரை கூடுதல் குடும்ப
பென்சன் வழங்க வேண்டும் என்பது அடிப்படை பென்சன் விதி.
ஆனால் சில காரணங்களால் ஆறாவது ஊதிய கமிசன் அமுல்படுத்தும்போது
இந்த பயன்கள் வழங்கப்படவில்லை. தற்போது
பத்து ஆண்டுகள் கழித்து மாற்றியமைக்க பட்ட கூடுதல் பென்சன் வழங்க CDA சர்குலர் 567
வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 1.2.1999 முதல் 23.9.2012 இக்கு இடைப்பட்ட
காலத்தில் தனது 65/67 வயதிற்குள் இறந்த பென்சனர் மனைவிக்கு கூடுதல் பென்சன் நிலுவை
தொகை (Arrears) 1.1.2006 முதல் 23.9.2012 வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் இணைய தளத்தில் உள்ள எங்கள்
www.exweltrust.in வலை தளத்தில், உங்களுடைய
முக்கிய விபரங்களை உள்ளீடு செய்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை
தெரிந்து கொண்டு வங்கியில் சமர்பித்து பெற்று கொள்ளலாம்.
வங்கி தானாக வழங்கும் என்று எண்ணி காத்திருக்க வேண்டாம்.
நீங்கள் கொடுக்க வேண்டிய தகவல்கள்:-
1.
உங்கள் கணவர்
பெயர்.
2.
ரேங்க்
3.
சர்வீஸ்.
4.
குருப்
5.
உங்கள் கணவர்
பிறந்த தேதி.
6.
இறந்த தேதி.
7.
வேலையை விட்டு
வெளி வந்த நாள்.
விழிப்புடன் இருந்து வங்கிக்கு விண்ணப்பம் கொடுத்தால்உங்களுக்கு
ஒரு கணிசமான தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் உதவிக்கு எங்கள் தொலை பேசி :
எக்ஸ் வெல் அறக்கட்டளை 0462-2575380
9894152959, 9786449036, 9442801632.
இந்த செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.
Tuesday, 11 October 2016
Wednesday, 5 October 2016
ஏழாவது ஊதிய கமிசன் அறிக்கையும் முழு பென்ஷன் வழங்கும் ஆணைகளும் வெளிவந்துவிட்டன.
ஓர் நல்ல செய்தி
ஏழாவது ஊதிய கமிசன் அறிக்கையும்
முழு பென்ஷன் வழங்கும் ஆணைகளும்
வெளிவந்துவிட்டன.
விரைவில் அனைவருக்கும் அரியர் வழங்கப்படும்.
இதற்கிடையில் நீங்கள் உங்கள்
அரியர் தொகையை தெரிந்துகொள்ள
விரும்பினால்கீழ் கண்ட
இணைய தளம் சென்று பிரிண்ட்
எடுத்துக்கொள்ளலாம்
இது பற்றிய உதவிக்கு கீழ்க்கண்ட
தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
9894152959, 04622575380
நீங்கள் ஸ்காலர்ஷிப் விண்ணப்பம் இன்னும்
அனுப்பாவிட்டால், இப்பவும் அனுப்பலாம்.
உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால்
ஒரு டிஜிட்டல் லாக்கர் திறந்து அதில்
உங்கள் டிரைவிங் லைசென்ஸ்
RC Book பதிவு செய்து
சுலபமாக பயணம் செய்யலாம்.
மேலும் தகவ லுக்கு
எக்ஸ் வெல் அறக்கட்டளை
அலுவலகத்தை அணுகவும்.
Wednesday, 7 September 2016
JWO. SEBASTIN DONATESS TO EXWEL TRUST
AIR VETERAN JWO SEBASTIN SHIRIL FROM USA
DONATES A SUM OF RS.5000 TO EXWEL TRUST.
Exwel Trust Trust is grateful for this gesture.
The services of Exwel Trust being appreciated by many
non resident Indians.
We will concentrate more on the needs of NRI Exsm
in Future.
Mr.Sebastin Sir, we asssure that the money will be used for the
well being of poor people.
Thank you Sir
May God Bless you.
Wednesday, 27 July 2016
பிரதமரின் ஸ்காலர் ஷிப் திட்டம்
பிரதமரின்
ஸ்காலர் ஷிப் திட்டம்
(Prime
Minister’s Scholarship Scheme)
கடந்த
ஆண்டு இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (2015-16) இரண்டாம் ஆண்டு புதுப்பிப்பதற்கு
(For Renewal) 1.6.2016 முதல் www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் புதுப்ப்பிக்க வேண்டும்.
முன்னதாக
பேப்பர் மூலம் புதுப்பிக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்கள் மறுபடியும் ஆன்லைன் மூலம்
அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
மேலும்
2016-17 ஆண்டுக்குரிய முதலாம் ஆண்டு ஸ்காலர் ஷிப் பற்றிய விளம்பரம் ஆகஸ்ட் 2016
இல் செய்தித்தாள்களிலும் ksb இணைய தளத்திலும் வெளியிடப்படும்.
கடந்த
ஆண்டு தேர்வு பெற்றவர்கள் கீழ் கண்ட சான்றிதழ்களுடன் அவசியம் ஆன்லைன் மூலம்
புதுப்பிப்பதற்கு (For Renewal) விண்ணப்பிக்க வேண்டும்.
1. கல்லூரியிலிருந்து பெறப்பட்ட “உண்மை சான்றை” (Bonafide
Certificate) ஒரிஜினலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். (Click here for BonafineCertificate)
2. பரீட்சையில் தேர்வான
சான்றிதழை விண்ணப்ப தாரரே கையொப்பமிட்டு அனுப்பவேண்டும். (Click here for Exam.Certificatre)
3. வங்கியில் ஆதார்
எண்ணை லிங்க் செய்த சான்றையும் அனுப்ப வேண்டும்.(Click here for linkingcertificate)
4. இரண்டு செமஸ்டர்
தேர்வுகளின் மார்க் சீட்டையும் அனுப்பவேண்டும்.
5. வங்கி பாஸ்
புத்தகத்தை ஸ்கேன் செய்து அல்லது உங்கள் பெயர் அச்சிடப்பட்ட காசோலை ஒன்றை கேன்சல்
செய்து அதை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.
6. விண்ணப்ப தாரரின்
ஆதார் அட்டையையும் ஸ்கேன் செய்து அனுப்பவேண்டும்.
இது பற்றிய மேலும்
உதவிக்கும், தகவலுக்கும்:
எக்ஸ் வெல்
அறக்கட்டளை
தொலை பேசி:
0462-2575380.
15G மிலிடரி லைன்,
சமாதானபுரம்,
பாளையம்கோட்டை.
627002.
Friday, 22 July 2016
Thursday, 21 July 2016
ஆறாவது ஊதிய கமிசனில் உள்ள குறைபாடுகள்
ஆறாவது
ஊதிய கமிசனில் உள்ள குறைபாடுகள்
ஆறாவது
ஊதிய கமிசனின் பரிந்துரைகளை சரியாக அமுல் படுத்தாததால் ராணுவ பென்சனர்களுக்கு
மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பென்சனர்கள்
நீதிமன்றங்கள் மூலமாக கிடைத்த நல்ல
தீர்ப்பின் பலனாக ஒரு சில அரியர் தொகை கிடைக்கும் தருவாயில் உள்ளனர்.
பெரும்பாலான
ராணுவ பென்சனர்கள் 33 ஆண்டுகள் சேவை செய்ய அனுமதிக்கபடுவதில்லை.இந்த சூழ்நிலையில்
அவர்கள் பென்சன் கணக்கீட்டில் மட்டும் இந்த 33 வருட சேவை நிபந்தனையை புகுத்தி
அவர்களுடைய பென்சனை விகிதாசார முறையில் (Reduced their pension on Pro-rata basis)
குறைத்து வழங்கி வந்தது அரசு. இது
முற்றிலும் நியாய மற்றது என உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார் ஒரு சாதாரண
முன்னாள் படை வீரர். அவர் கண்ட வெற்றிதான்
இன்று அனைவரும் எதிர்பார்க்கும் 33 வருட முழு பென்சன். (De linking of 33 years
for full pension issue)
ஒரு
ராணுவ பென்சனர் நியாயமான முழு பென்சன் பெற இந்த அரசு அனுமதித்திருந்தால், அவர்
65 வயதுக்கு முன்னதாக மரண மடைந்தபோது,
அவர் மனைவிக்கும் முழு பென்சன் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் நடந்தது என்ன ? இந்த முழு பென்சன்
அவருக்கும் வழ ங்கப்படவில்லை, அவர் மனைவிக்கும் கொடுக்கப்படவில்லை. ஒரு சில சமயங்களில் பென்சனில் சில மாற்றங்கள்
வரும்போது, அதன் பயன் அவர் இறந்த பின் அவர் மனைவிக்கு மறுக்கப்பட்டது. கேட்பார் யாருமில்லாத காரணத்தால் இந்த
விதவைகளுக்கு நியாயமான பென்சன் மறுக்கப்பட்டது.
சாதாரணமாக பென்சன் விதிகளின் படி ஒருவர் கடைசியாக வாங்கிய
சம்பளத்தில் சரி பாதி பென்சனாக வழங்கப்படவேண்டும். ஆனால் ராணுவ பென்சனர்களுக்கு மட்டும் இந்த விதி
மாற்றப்பட்டு பென்சன் குறைக்கப்பட்டது.
இது மாபெரும் அநீதி என நிரூபிக்கப்பட்டு அனைத்து ராணுவ பென்சனர்களுக்கும்
ஒரு கணிசமான தொகை ஆரியராக கிடைக்க உள்ளது.
(Arrears
of enhanced pension from 1.1.2006) இதற்குரிய அரசாணையை வெளியிடுவதை
ஏனோ தாமதபடுத்துகிறது அரசு. காரணம்
புரியவில்லை.
தற்போது
65 வயதுக்கு முன்னதாக மரணமடைந்த ராணுவ பென்சனர்களின் மனைவிக்கு வழங்கப்பட்ட
குறைந்த பென்சனை சரி செய்து முழு பென்சன் வழங்க அரசாணைகள் வெளி வந்துள்ளது. இதன் படி 2002 முதல் 2012 இக்குள் மரணமடைந்த
ராணுவ பென்சனர்களின் மனைவிக்கு முழு பென்சனுக்குரிய அரியர் தொகை கிடைக்கும்.
ஒவ்வொருவரும்
விழிப்புடன் இருந்து கோரிக்கை விடுத்தால்தான் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கூடுதல் குடும்ப பென்சன் அரியர் தொகை உரியவர்களுக்கு எழிதாக கிடைக்க (Arrears of enhanced Family pension for the period from 1.1.2006 to 23.9.2012) எங்கள் இணைய தளத்தில் www.exweltrust.in விரைவில் வசதி செய்து கொடுக்கப்படும். தினமும் எங்கள் இணைய தளத்தை www.exweltrust.in பார்க்கவும்.
உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.
Subscribe to:
Posts (Atom)