இராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகத்தில் உள்ள,
உங்கள் சிந்தனையை தூண்டும் சில கேள்வி/பதில்கள்
இதோ ஒரு சில கேள்வி பதில்கள்.
கேள்வி.
நான்
ராணுவத்தில் சேரும்போது நல்ல ஆரோக்கியமுடன் இருந்தேன். பின்னர் எனக்கு நோய் வந்ததும், இயலாமை நிலை
அடைந்ததும் ராணுவ பணியின் கடுமையான நிற்பந்தங்களினால்தான் என்று எனக்கு நன்கு
தெரிகிறது. ஆனால் மருத்துவ குழுவானது எனது
நோய்க்கும், இயலாமைக்கும் ராணுவ சேவை காரணம் இல்லை என்கிறது. இது என்ன நியாயம்?
பதில்:
ஒரு படை
வீரனுக்கு இயலாமை என்பது ஒரு நோயினாலோ அல்லது ஏதேனும் விபத்துக்களாலும்
வரலாம். ஏதேனும் விபத்துகளால் இயலாமை
அடைந்தால் விபத்து பற்றி விசாரணை அறிக்கைப்படி பணி நிமித்தம் ஏற்பட்ட இயலாமைக்கு
உரிய இழப்பீடும், பணி இல்லாத விபத்து எந்த இழப்பீடும் வழங்காமல் போகலாம். விசாரணையின் முடிவே இறுதியானது. இதே போல் சில நோய்க்கு காரணம் மரபணுவும் /
குடும்ப பாரம்பரியமும் கூட இருக்கலாம்.
அல்லது ராணுவ சேவையாகவும் கூட இருக்கலாம்.
விசேஷ மருத்துவ அதிகாரிகளின் முடிவு இதில் இறிதியானது. ஆகவே இதுபற்றி முழுமையாக அறிய பெரிய அளவில்
ஆராய்ச்சிகள் செய்துதான் முடிவு எடுக்க வேண்டும்.
தற்போது நடைமுறையில் இறுக்கும் இந்த முறை அத்தனை திருப்திகரமானதாக இல்லை
என்பது பரவலாக தெரிகிறது. சந்தேகத்தின்
பலனை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதில் கூட பார பட்சம் காட்ட படுகிறது என்பது
உண்மை. நீங்கள் நீதிமன்றம் மூலம் நிவாரணம்
பெற வழியுண்டு.
கேள்வி:
புதிதாக
திருமணமான என் மருமகள், தன் காதலனுடன் சேர்ந்து கொண்டு என் மகனை கொலை செய்து
விட்டதாக சந்தேகபடுகிறோம். கர்ப்பமாய்
இருக்கும் அவள் தற்போது போலிஸ் காவலில் இருக்கிறாள். பெண்மைக்கும், புனிதமான திருமண வாழ்க்கைக்கும் களங்கம்
ஏற்படுத்திய அவளுக்கு பென்சன் கொடுக்காமல் எனக்கு என் மகனுடைய பென்சன் கிடைக்க
வழியுண்டா ?
பதில்:
பென்சன் விதிகளின்படி
பென்சன் தகுதியுள்ள ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையில்
இருக்கும்போது அவருக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் வரை பென்சன்
வழங்கப்படமாட்டாது. ஆனால் அவர் குற்றவாளி
என்று நிருபிக்கபடும் வரை அந்த பென்ஷனை மற்றவருக்கும் கொடுக்க முடியாது. யாருக்கும் பென்சன் வழங்கப்படாமல் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அவர் குற்றவாளி
என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற நேர்ந்தால், அவருக்கு பிறக்கபோகும் குழந்தைக்கு
பென்சனில் உரிமை உண்டு. ஒருவேளை அந்த
குழந்தை உங்கள் மகனுக்கு பிறந்ததல்ல அவள் காதலனுக்கு பிறந்ததுதான் என்று
நிரூபிக்கும் பட்சத்தில் உங்களுக்கு பலன் உண்டு.
அப்படி நிரூபிக்க தவறும் பட்சத்தில் குழந்தைக்கு கார்டியனாக இருப்பவர்
மூலம் பென்சன் வழங்கப்படும்.
இப்படி
எண்ணற்ற பிரச்சினைகளுக்கு வழி காணும் இந்த புத்தகத்தை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க
வேண்டும். இது போன்ற ஒரு புத்தகத்தை இதுவரை யாரும் தமிழில்
வெளியிட வில்லை. உங்கள் நல் வாழ்வுக்கும்
துணை நிற்கும் ஓர் அருமையான புத்தகம்.
உங்கள் தேவைக்கும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
எக்ஸ் வெல்
அறக்கட்டளை
15G மிலிடரி லயன்ஸ்,
சமாதானபுரம்,
பாளையம்கோட்டை
திருநெல்வேலி
627002.
Phone:
9894152959, 9786449036, 9894125019, 9442801632, 04622575380
இந்த புத்தகத்தை வாங்குவத்தின் மூலம் நீங்கள் ஒரு ஏழை குழந்தை
கல்வி பயில உதவி செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment