Saturday, 1 March 2014

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இராணுவ பென்சனர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்சன் அடிப்படையில் பென்சன் வழங்கலாம் என அரசு கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரே ரேங்கில் உள்ள இரண்டு ராணுவ வீரர்கள் ஒரே சர்வீஸ் இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஒய்வு பெற்ற தேதியை ஒப்பிடாமல் ஒரே பென்சன் வழங்க படும்.

இதற்காக நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் தனது இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் ரூ.500 கோடி ஒதுக்கியிருப்பதாக தெரிகிறது.  தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வரும் முன்னதாக உரிய அரசு ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ராணுவ அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல். 

இதற்கிடையில்  7 ஆவது ஊதிய கமிசனும் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் தலைவராக ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், ராணுவ தீர்பாயங்களின் தலைவராக பணி புரிந்த திரு.A.K. மாத்தூர் அவர்கள் நியமிக்க பட்டுள்ளார்கள்.  ராணுவ தீர்பாயங்களில் பணிபுரிந்து பல பென்சன் வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு இவர் வழங்கியுள்ளதால் இந்த 7 ஆவது ஊதிய கமிசனில் ராணுவ பென்சனர்களின் குறைகள் முழுமையாக தீர்க்கப்படும் என நம்புவோமாக.

வரப்போகும் மக்களவை தேர்தலில் பல ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கெடுக்க உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.

சமீபத்தில் ஒய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் V.K. சிங்  அவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.  அதே போல் இந்திய எக் சர்விஸ் மென் மொவ்மென்ட் என்ற சங்கத்தின் தலைவராக உள்ள லெப்.ஜெனரல்.ராஜ் காடியான் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.

ஆக இந்த மக்களவை தேர்தல் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் சமீபத்தில் பஞ்சாபில் பல முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதிரடியாக “ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டதன் பயனாக அவசர அவசரமாக இந்த OROP  கிடைக்க உள்ளது.

ராகுல் காந்தி அவர்கள் அரசில் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. 

ஒன் ரேங்க் ஒன் பென்சன் அடிப்படையில் 01.04.2014 முதல் கீழ் கண்ட பென்சன் கிடைக்கும் என்று தெரிகிறது.  முழு விவரம் விரைவில் வெளி வரும்.

19 வருட சர்வீஸ் கொண்ட சிப்பாய் க்கு Rs.7600  (Rs.1742 கூடுதல் கிடைக்கும்)
24 வருட சர்வீஸ் கொண்ட நாயக் க்கு Rs.8680  (Rs.2081 கூடுதல் கிடைக்கும் )
26 வருட சர்வீஸ் கொண்ட ஹவில்டாருக்கு  Rs.10005.  (Rs.2630 கூடுதல் கிடைக்கும் ) 

இவர்களுடன் சம்பந்தப்பட்ட குடும்ப பென்சனர்களுக்கும் கூடுதல் பென்சன் கிடைக்கும்.

ஜே சி ஒ களுக்கும் ஆனரரி ஆபிசர்களுக்கும் தற்போதைய பென்சனில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.  முழு விபரமும் அரசு ஆணைகள் வந்த பின் தான் தெரியும்.


எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...