இராணுவ
தீர்பாயங்கள் சாதித்தது என்ன ?
சண்டிகர் இராணுவ தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட சுமார்
3000 நல்ல தீர்ப்புகள் இன்னும் இராணுவ
அமைச்சகத்தால் நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இராணுவ தீர்ப்பாயங்களை தன் கைப்பாவையாக நடத்தும் இராணுவ
அமைச்சகம், இந்த தீர்ப்பாயத்தை மத்திய சட்ட அமைச்சகத்தின் மேற்பார்வையில் கொண்டுவர
மறுக்கிறது.
இந்த தீர்ப்பாயத்தின் பல நல்ல தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம்
உறுதி செய்த பின்னரும், இராணுவ அமைச்சகம் அதை அமுல்படுத்த மறுக்கிறது. நீதி மன்ற அவமதிப்பு வழக்கு கூட தொடுக்க
முடியாதபடி இராணுவ தீர்ப்பாய சட்ட திட்டங்கள் இராணுவ அமைச்சகத்தால்
உருவாக்கப்பட்டு, நல்ல முறையில் செயல் பட விடாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த
தீர்ப்பாயங்கள் வெறும் கண் துடைப்பு என நிரூபணமாகி வருகிறது.
அமுல் படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான
தீர்ப்புகளை அமுல் படுத்த, இராணுவ அமைச்சகத்தின் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர
ஆவன செய்யவேண்டும் என்று மேஜர் நவதீப் சிங் என்ற வழக்கறிஞர் பஞ்சாப் ஹரியானா உயர்
நீதி மன்றத்தில் ஒரு போது நல வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாக வழக்கு தொடுத்தவர்களுக்கு நஷ்ட ஈடு
வழங்க சில தீர்ப்புகளில் வகை செய்யப்படும்.
ஆனால் இந்த நஷ்ட ஈட்டு தொகையை நீதி மன்ற பதிவாளருக்கு வழங்க இராணுவ
அமைச்சகம் பரிந்துரைப்பது ஒரு மாபெரும் கொடுமை.
இதை எதிர்த்தும் மேஜர் நவதீப் சிங் ஒரு போது நல வழக்கு தொடுத்துள்ளார்.
ஆனால் இராணுவ அமைச்சகம் எதையும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் முன்னாள் /இந்நாள்
இராணுவ வீரர்கள் இந்த நீதி மன்றங்களின்
மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து
விடுவார்கள்.