தாமதமாக வழங்கப்படும் பென்சன்
நிலுவைதொகைக்கு
நஷ்ட ஈடு கேட்க உங்களுக்கு உரிமை
உண்டு.
நியாயமானபடி பார்த்தல் ஒவ்வொரு இராணுவ
பென்சனருக்கும், குடும்ப பென்சனருக்கும் பிப்ரவரி 2013 இல் பென்சன் நிலுவைத்தொகை
வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்
வழங்கப்படவில்லை. எனவே வங்கி விதிகளின்படி
(ரிசர்வ் வங்கி கடிதங்களின் படி ) பென்சனர் கேட்காமலேயே தாமதத்திற்கு நஷ்ட ஈடு
வழங்க வேண்டும்.
இன்றைய தேதியில்
ஒரு ஹவில்டார் மனைவிக்கு ரூ.90 நஷ்ட ஈடு கிடைக்கும்.
ஒரு நாயப் சுபெடார் மனைவிக்கு ரூ.84 கிடைக்கும்.
ஒரு சுபெடார் மனைவிக்கு ரூ.426 கிடைக்கும்.
ஒரு சுபேதார் மேஜர் மனைவிக்கு ரூ.615 கிடைக்கும்.
ஹோனரரி கேப்டன் மனைவிக்கு ரூ.334 கிடைக்கும்.
ஹோனரரி லெப்டினன்ட் மனைவிக்கு ரூ.286
கிடைக்கும்.
ஒரு Y
குரூப் சிப்பாய்க்கு ரூ. 121 கிடைக்கும்.
ஒரு Y
குரூப் நாயக்குக்கு ரூ. 128 கிடைக்கும்.
ஒரு Y குரூப் ஹவில்டருக்கு ரூ.186 கிடைக்கும்.
ஒரு ஹோனரரி லெப்டினன்ட் க்கு ரூ. 476 கிடைக்கும்.
ஒரு ஹோனரரி கேப்டனுக்கு ரூ.556 கிடைக்கும்.
எனவே ஒவ்வொரு பென்சனரும் இந்த நஷ்ட ஈடு வேண்டி உடனே
வங்கிக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கவும். மாதிரி விண்ணப்பத்திற்கு கீழே கிளிக் செய்யவும். உங்கள் வங்கி ஒரு மாதத்திற்குள் இந்த வட்டியை
கொடுக்காவிட்டால், அதே விண்ணப்பத்தை “ Banking Ombudsman”
Reserve Bank of India, Chennai 1. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இந்த நஷ்ட ஈடு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் இதை
நாம் கேட்பதின் மூலம் வங்கிகள் தாமதமின்றி பென்சன் நிலுவைத்தொகையை வழங்க ஏதுவாக இருக்கும். காரணம் தகுந்த புகாருக்கு வங்கிகள் பதில்
சொல்லியாக வேண்டும். மேலும் ஒரே நேரத்தில்
அனைவரும் இது மாதிரி கோரிக்கை வைத்தால் நம் வேலைகள் உடனே நடக்கும்.
இதை படிப்பவர்கள் உண்மையாக களம் இறங்கி
மற்றவர்களையும் செய்ய சொன்னால், கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
காண்டீனில் கோட்டாவை நிறுத்தினால் நிச்சயம் களம்
இறங்குவீர்கள். ஆனால் இதற்க்கு
செய்வீர்களா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
நமது முன்னாள் இராணுவத்தினர் நலன் காக்க எவ்வளவோ
நுணுக்கமான செய்திகளை இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதை கண்டு கொள்வதே
இல்லை.
சுமார்
1.5 லட்சம் முன்னாள் இராணுவத்தினரை
கொண்ட தமிழ் நாட்டில் ஒரு ஆயிரம் பேர் கூட இந்த வலைப்பதிவை படிப்பதில்லை. அப்படி படித்தாலும் எந்த ஒரு பதிலும்
கொடுப்பதில்லை.
இது தொடர்வது நம் இன வளர்ச்சிக்கு நல்லதில்லை.
நீங்கள் முயற்சிசெய்தால் இந்த வலைப்ப்பூ
செய்திகளை உங்கள் மொபைல் போனிலேயே
பார்க்கலாம். “facebook” லும் பார்க்கலாம்.
“twitter”
லும் பார்க்கலாம்.
இதெல்லாம் என்ன, என்ன என்று தேடினால் கிடைக்கும்.
“தேடுங்கள்
கிடைக்கும்”
“தட்டுங்கள் திறக்கப்படும்”
“கேளுங்கள் கொடுக்கப்படும்”
மாதிரி விண்ணப்ப படிவம்.