Sunday 31 January 2016

"தெரிந்து கொள்ளுங்கள்" ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம்



“தெரிந்து கொள்ளுங்கள்”
(இரண்டாம் பதிப்பு)
ராணுவ பென்சனர்களுக்கு ஓர் வழிகாட்டி

பல முக்கிய தகவல்களை கொண்ட இந்த புத்தகத்தை
ஒவ்வொரு ராணுவ பென்சனரும் அவசியம் படிக்க வேண்டும்.

CDA cir.547 ன் படி கிடைக்க வேண்டிய அரியர் தொகை
கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப பென்சனர்களுக்கு கிடைக்க வேண்டிய அரியர் தொகை
கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவன் பிரமாண், டிஜிட்டல் லாக்கர் பற்றி விளக்கம் உள்ளது.
SMS மூலம் சரியான பென்சன் பெரும் முறை கொடுக்க பட்டுள்ளது.

இந்த புத்தகம் வாங்குபவர்களுக்கு OROP பட்டியல் வெளிவந்தவுடன்
அனுப்பி வைக்கப்படும்.
கிகைகுமிடம்
C.Muthukrishnan
Exwel Trust,
15G Military Lines, Samathanapuram,
Tirunelveli 627002.
Phone:04622575380.

விலை: ரூ.130 (கொரியர் சார்ஜெஸ் உட்பட)

வருமான வரியும் பென்சனர்களும்


வருமான வரியும் பென்சனர்களும்

பென்சனர்கள் வருமான வரி பற்றி ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது.  உங்களால் முடிந்தால் வரி கட்டுவதை திட்டமிடுங்கள் அல்லது முழுமையாக வரியை கட்டிவிட்டு வயதான காலத்தில் நிம்மதியாக இருங்கள்.

கட்ட வேண்டிய வரியை திட்டமிடுவதற்கு மூன்று முக்கிய பணிகளை நீங்கள் செய்யவேண்டும்.

1.    ஒரு நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உங்களுக்கு பென்சன் உட்பட வேறு என்னனென்ன வருமானம் வருகிறது என்பதை கணக்கிடவும்.
2.    இந்த மொத்த தொகையை வைத்துக்கொண்டு, கீழே கொடுத்துள்ள அட்டவணைப்படி நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
3.    நீங்கள் எவ்வளவு வரி கட்டவேண்டும் என்பதை கணக்கிட்ட பின், கீழ் கண்ட இரண்டில் ஒன்றை முடிவு செய்யவேண்டும்.
(a)  வரியை முழுமையாக கட்டிவிடுவது ...அல்லது
(b)  திட்டமிட்டு வரியை குறைக்க ஏதாவது செய்யவேண்டும்.
வயது 60 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு (ஏப்ரல் 1 1955 பின்னர் பிறந்தவர்களுக்கு) மார்ச் 31 முடிய உரிய நிதியாண்டுக்கு வருமான வரி விகிதம் (Assessment year 2015-16)

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
Up to Rs.2,50,000
Nil
Nil
Nil
Rs.2,50,000 to Rs.5,00,000
10% of income above
Rs.2,50,000
Nil
3% of income tax
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.25,000+20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,000 to
1,00,00,000
Rs.1,25,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,25,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.


மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல் ) அந்த நிதியாண்டுக்குள் இருக்க வேண்டும். 80 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
Up to Rs.3,00,000
Nil
Nil
Nil
Rs.3,00,000  to Rs.5,00,000
10% of income above
Rs.3,00,000
Nil
3% of income tax
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.20,000+20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,000 to
1,00,00,000
Rs.1,20,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,20,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.
80 வயதுக்கு மேல். (ஏப்ரல் 1 1935 க்கு முன் பிறந்தவர்கள் )

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
up to   Rs.5,00,000
Nil
Nil
Nil
Rs.5,00,001 to Rs.10,00,000
20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,001 to
1,00,00,000
Rs.1,00,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,00,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.
வயதுக்கு தகுந்த வருமான உச்ச வரம்பை விட அதிகமாக வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக ரிடர்ன் (Return) தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ரிடர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31.
தணிக்கை செய்யவேண்டிய வருமான கணக்கு உள்ளவர்கள் செப்டம்பர் 30 வரை ரிடர்ன் தாக்கல் செய்யலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ரிடர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
TDS (Tax Deducted at Source) என்றால் என்ன ?
வருமானம் உருவாகும் இடத்தில் வரி பிடித்தம் செய்வதற்கு பெயர் தான் TDS.
ஒருவர் ரூ.ஒரு லட்சத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அவர் பான் கார்டு (PAN Card ) வங்கிக்கு கொடுத்திருந்து,  ரூ.11,000 வட்டி பெறுவதாக இருந்தால் அதில் வருமான வரி சட்டப்படி அதில் 10% TDS  பிடித்தம் செய்து மீதி ரூ.9,900 மட்டுமே வட்டியாக வழங்கப்படும். ஒருவேளை அவர் பான் கார்டு கொடுக்காமல் இருந்தால் வட்டியில் 20% பிடித்தம் செய்யப்பட்டு ரூ.8,800 மட்டுமே வட்டியாக கிடைக்கும்.

அவருடைய ஆண்டு வருமானம், வயதிற்கேற்ற உச்ச வரம்பிற்குள் (இந்த வட்டியையும் சேர்த்து ) இருந்து பான் கார்டும், படிவம் 15G/15H ம், ஏப்ரல் மாதத்திற்குள் வங்கிக்கு கொடுத்திருந்தால் வட்டியில் எந்த பிடித்தமும் செய்யப்பட மாட்டாது.  60 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் படிவம் 15G இம், 60 வயதை கடந்தவர்கள் படிவம் 15H இம் கொடுக்க வேண்டும்.

உங்கள் வைப்பு நிதியில் வங்கிகள் TDS பிடித்திருந்தால் நீங்கள் படிவம் 16 ஐ கண்டிப்பாக வங்கியிடமிருந்து பெறவேண்டும்.  இந்த படிவம் 16 ஐ வைத்து நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்து, பின்னர் ஒருவேளை கூடுதலாக வரி பிடித்தம் செய்திருந்தால் அதை நீங்கள் திரும்ப பெறலாம். வரி பிடித்தத்தை குறைக்க நீங்கள் ஏதேனும் மூலதனம் செய்திருந்தால் அதன் முழு விபரத்தையும் முன்னதாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
வயதான காலத்தில் வரி விலக்கிற்காக கண்ட கண்ட சேமிப்புகளையும் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் உரிய வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்திவிட்டு நிம்மதியாக இருப்பதே நல்லது என்பது இதை எழுதுபவரது கருத்து.  அல்லது நல்ல நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி உரிய வரி விலக்கும் பெறலாம். (நன்கொடை நமக்கு மன நிம்மதி தரும்) ஏனென்றால் பெரும்பாலான குடும்பங்களில் வயதானவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன் வருவதில்லை. 

வங்கிகளும் TDS பிடித்தம் செய்துவிட்டு, படிவம் 16 ஐ குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை.  இதனால் ஒரு வயதான வாடிக்கையாளர் பல முறை வங்கிக்கு அலையை வேண்டியதுள்ளது. (இணைய தள சேவை இளைஞர்களுக்கே என்று ஆன பின் வங்கிகளில் முதியவர்களை யாரும் மதிப்பதில்லை).  சேவை மனப்பான்மை உடைய இனைஞர்களை தேர்வு செய்து வங்கிகளில் பணியில் அமர்த்தாமல், பொறியியல் பட்டதாரிகளையும், கணிப்பொறி வல்லுனர்களையும் வங்கியில் சாதாரண பணியில் அமர்த்தியுள்ளதால் சேவையின் தரம் குறைந்து வருகிறது.
நல்ல அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்ற பல முதியவர்கள், தன்பிள்ளைகள் உடன் இல்லாததால், தனியாக இருந்துகொண்டு சிரமப்படுகின்றனர்.  உதவிக்கு நம்பிக்கையான ஆள் கிடைக்காததால் பயத்துடன் வாழ்கின்றனர்.

அதே நேரத்தில் ஒரு கூலி வேலை பார்க்கும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உணவருந்தி ஒரே அறையில் துயில்கின்றனர்.  பணமும் பாசமும் ஒரு இடத்தில் இருப்பதில்லை.  

பணமே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் பலர் அது தவறு என்பதை காலம் கடந்து உணர்ந்துள்ளனர். ரூ.ஒரு கோடி விலையில் மனையும், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மாளிகையும் கட்டி ஓகோ என்று வாழ்ந்தவர்கள் ஒரு நாள் இரவு வெள்ளத்தில் அத்தனையையும் இழந்து வீதிக்கு வந்துவிட்ட நிலையை நாம் கண் கூடாக கண்டோம்.  சென்னை வெள்ளம் மக்களுக்கு புகட்டிய பாடம் மறக்க முடியாதது.  ஆம் வெள்ளத்தில் சிக்கியவர்கள் துயர் துடைக்க வந்து குவிந்த நிவாரண பொருட்களே சாட்சி.  ஒரு மாபெரும் வெள்ளத்தால் மனித நேயம் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.



Tuesday 26 January 2016

டிஜிட்டல் லாக்கர் மூலமாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.


டிஜிட்டல் லாக்கர் மூலமாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
(Sharing of documents through Digital Locker)

இந்திய அரசு கடைந்த ஜூலை 2015 ல் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் லாக்கர் வசதியை பலர் பயன் படுத்த தொடங்கி விட்டனர்.  முதல் கட்டமாக அவர்களுடைய ஆவணங்களை ஸ்கேன் செய்து பத்திரமாக வைத்துள்ளனர் அவ்வளவு தான்.  இந்த லாக்கருடைய மிக முக்கியமான உபயோகமான “ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுதல்” (sharing of documents)  வசதியை யாரும் எந்த அரசு அலுவலககங்களுக்கும் செய்வதாக தெரியவில்லை.  ஆகவே இந்த டிஜிட்டல் லாக்கரின் முக்கிய உபயோகமான ஆவண பகிர்தல் வசதியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.  அதற்க்கு அரசு உடனே தேவையான சுற்றறிக்கைகளையும் அனைத்து அனுவலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

ஒரு அரசு அலுவலகமோ, ஒரு தனியார் நிறுவனமோ, அல்லது வங்கிகளோ உங்களுடைய அடையாள அட்டையையோ அல்லது வேறு முக்கிய ஆவணங்களை கேட்டால் அவற்றை நாம் டிஜிட்டல் லாக்கர் மூலம் அனுப்பி அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த வசதி இதில் உள்ளது. இருந்தும் யாரும் பயன் படுத்துவதாக தெரிய வில்லை.

வங்கிகள் இன்னும் பான் கார்டு ஜெராக்ஸ் கேட்கிறது.  ஏன் அவருடைய டிஜிட்டல் லாக்கரில் இருந்து வங்கி இ-மெயில் ID க்கு அனுப்ப சொல்லி ஏன் கேட்கக்கூடாது ?  இதற்க்கு தனிப்பட்ட அனுமதி தேவை இருப்பதாக தெரியவில்லை.  இதே போல்  KYC ஆவணங்களையும் கத்தை கத்தையாக கேட்கிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், மற்றும் அனைத்து அனுவலகங்களும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நேரில் ஜெராக்ஸ் காப்பி கேட்பதற்கு பதிலாக அவரவர் டிஜிட்டல் லாக்கரில் இருந்து ஈமெயில் முறையில் பெற்றுக்கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும்.  ஆவணங்களை பத்திரமாக ஸ்கேன் செய்து வைத்துகொள்ள மட்டும் அல்ல இந்த லாக்கர், பல இடங்களுக்கும் ஆவணங்களை தேவையின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் நடைமுறை படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையாளரின் நோக்கம்.  மேலும் சுய சான்றிதழ் வசதியும் (Self Attestation) தரப்பட்டுள்ளது.  மத்திய அரசு மிகவும் பெருந்தன்மையுடன் அட்டஸ்டேசன் முறையையும், ஆணையர் முன் உறுதி மொழி (Abolition of Attestation and Affidavits from Notary public) முறையையும் ஒழிக்க அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.  ஆனால் தமிழக அரசு இன்னும் இதை முழுமையாக நடைமுறைபடுத்த வில்லை.


மக்களாகிய நாம்தான்  விழிப்புடன் இருந்து அரசை செயல்படுத்த செய்யவேண்டும்.   நமது ECHS கிளினிக்கில் இந்த முறையை பின்பற்ற, கடிதம் எழுதப்பட்டுள்ளது.  வங்கிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 


நமது வெற்றிகளை கொண்டாடும் நாள்.
இந்த நாட்டு மக்கள் நம் தியாகத்தை மறந்தாலும்,
நம் கடமையை நாம் செய்வோம்.

ஞாபகமிருக்கட்டும் 
இந்த நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்காத நாடு 
இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை 
இழந்துவிடும்..

ஜெய் ஹிந்த்

Monday 25 January 2016

பென்சன் அரியர் தொகை வழங்குவதில் வரலாறு காணாத குழப்பம்



பென்சன் அரியர் தொகை வழங்குவதில் வரலாறு காணாத குழப்பம்

ஆறாவது ஊதிய கமிசனின் பரிந்துரைகளை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றி அமுல் படுத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்து நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு இந்த தீர்ப்பை கட்டாயம் அமுல் படுத்த வேண்டிய நிலையில், தெளிவான ஆணைகள் பிறப்பிக்காமல் மறுபடியும் ராணுவ பென்சனர்களை பெரும் குழப்பத்துகுள்ளாக்கி, வங்கிகளையும் செயலிளக்க செய்து விட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண சிப்பாய் பென்சனர்களும் அவர்களுடைய குடும்ப பென்சனர்கள் மட்டும்தான்.  அதிகாரிகள் எல்லாம் அவரர் அரியர் தொகையை உடனே பெற்று கொண்டார்கள். ஆனால் இந்த ஏழை சிப்பாய் பென்சனர்கள் செய்வதறியாது சிதைந்து விட்டனர்.

இதற்க்கு என்னதான் தீர்வு ? அரசும், CDA அலகாபாத்தும், வங்கிகளும் கவலை பட்டதாக தெரியவில்லை.

ராணுவ அமைச்சகம் செப்டம்பர் 3 இம் தேதி 2015 ல் வெளியிட்ட ஒரு கடிதத்துக்கு CDA முதலில் 547, 548  என இரண்டு சர்குலர்களை வெளியிட்டது.  பின்னர் அதற்க்கு  விளக்கம் கூறி 549, 551, 554 என மூன்று சர்குலர்களை வெளியிட்டது.  இருந்தும் அனைவருக்கும் அரியர் தொகை கிடைத்த பாடில்லை.  இது போன்ற நிர்வாக அவல நிலை எங்கும் கிடையாது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிகள் இந்த பென்சன் வழங்கும் பணியை செய்து வருகிறது.  இருந்தும் அவர்களுக்கு இன்று வரை ஒரு தெளிவு இல்லை.  ராணுவ பென்சனை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகளான ரேங்க், சர்விஸ், மற்றும் குரூப் ஆகிய இந்த மூன்றும் வங்கிகளிடம்  சரியான தரவு தளத்தில் (Data Base) இல்லாததால், இந்த தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.  எந்த ஒரு வங்கியும் நல்ல ஒரு தரவு தளத்தை (Data Base)  உருவாக்க முயற்சி எடுப்பதாக தெரியவில்லை.  தகவல் தொழில் நுட்ப துறையில் கொடிகட்டி பறக்கும் இந்தியா இதை ஏனோ கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.  CDA அலுவலகத்தின் பணிகளில் அவசர சீர்திருத்தம் தேவை.

ஒரு கேப்டனின் மனைவி ஒரு சிப்பாய் மனைவியின் பென்சன் வாங்கும் அவல நிலை இன்றும் தொடர்கிறது.  இதற்க்கு ஒரே தீர்வு, ஒவ்வொரு ராணுவ பென்சனரும், ராணுவ குடும்ப பென்சனரும் தன் பென்சனை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.

சமீபத்தில் நாங்கள் வெளியிட்டிருக்கும் “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகத்தில் ஒவ்வொரு பென்சனருக்கும் எவ்வளவு அரியர் தொகை கிடைக்க வேண்டும் என்பதை கொடுத்திருக்கிறோம்.  அந்த புத்தகத்தை வாங்கி படித்து, உங்களுக்கு அந்த அரியர் கிடைக்க வில்லையென்றால் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.  உங்களுக்கு உடனே அரியர் கிடைக்கை அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஒரு X குரூப் ஹவில்தார் மனைவிக்கு Rs.70,068, இம் ஒரு ஆனரரி கேப்டன் மனைவிக்கு Rs.1,42,715 இம் செப்டம்பர் 2015 இல் கிடைத்திருக்கவேண்டும்.  ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. உடனே செயல் படுங்கள்.  புத்தகம் தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி: 0462-2575380, 9894152959.

ஒவ்வொரு ஆண்டும் பென்சனுக்காக ஒதுக்கப்படும் தொகை முழுவதும் சரியான முறையில் பட்டுவாடா செய்யப்படாமல் பெரும் தொகை அப்படியே அரசு கஜானாவுக்கு திருப்பி கொடுக்கபடுவதால் அரசு இதை கண்டுகொள்வதில்லை.  ராணுவ பென்சன் செலவை சரியான படி கணக்கிடவும், தணிக்கை முறையை மேம்படுத்தவும் சீர்திருத்தம் அவசியம் தேவை.


ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையே இன்னும் அரசால் துல்லியமாக கணக்கிட முடியவில்ல என்பதுதான் உண்மை.

Friday 22 January 2016

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவும் முன்னாள் ராணுவத்தினரும்







ராணுவ தீர்ப்பாயங்களும் தேசிய சட்ட ஆணைக்குழுவும்

ராணுவ தீர்ப்பாயங்கள் நாடெங்கிலும் சில முக்கிய நகரங்களில் மட்டுமே உள்ளது.  எனவே கிராமங்களில் வசிக்கும் பல ஆயிரகணக்கான முன்னாள் ராணுவத்தினர் இந்த தீர்ப்பாயங்களை அணுக முடியாத நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, தேசிய, மாநில, மாவட்ட அளவில் நன்கு செயல்பட்டு வரும் சட்ட ஆணைக்குழுக்கள் மூலம் முன்னாள் ராணுவத்தினருக்கு இலவச சட்ட உதவி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ராணுவ தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் அதாலத் மூலம்  (Lok Adalat) (மக்கள் நீதி மன்றம்) தீர்வு செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 19.01.2016 செவ்வாய் அன்று முன்னாள் ரானுவத்தினர்களுக்கு ஒரு இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.  மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர்/மூத்த நீதிபதி திருமதி. J.தமிழரசி அவர்கள் தலைமை தாங்கி இலவச சட்ட உதவி மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
வரும்காலங்களில் ராணுவ தீர்ப்பாயங்களுக்கு இலவசமாக வழக்குகளை எடுத்துசெல்ல வசதிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்கள்.

சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் இந்த மையத்தின் சேவை பற்றி அழகாக எடுத்துரைத்தார்.  அநேக குடும்ப பிரச்சனைகளுக்கு எளிய, சமரச முறையில் தீர்வு கண்ட விதத்தை விளக்கினார்.

முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் நடைமுறை பிரச்சனைகள் பற்றி எக்ஸ் வெல் அறக்கட்டளையை சேர்ந்த சார்ஜன்ட்.திரு.செ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் விரிவாக பேசினார்கள்.  அனைவரும் நம்பிக்கையுடன் இந்த மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி கேட்டுக்கொண்டார்.கிராமங்களில் பொதுவாக முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளை வன்னிக்கோ நேந்தல் கேப்டன்.திரு.ஆறுமுகம் அவர்கள் விரிவாக பேசினார்கள்.

முடிவில் மூத்த நிர்வாக உதவியானர் திரு.கோமதிநாயகம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.


மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நீதிபதி.திருமதி. J.தமிழரசி அவர்கள் இன்முகத்துடன் அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவரும் பெரும் நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.

இந்த விழிப்புணர்வு முகாமுக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளை அனைத்து உதவிகளும் செய்தது.  

Friday 15 January 2016

அரியர் தொகை குறைவாக கிடைப்பதேன் ?




முன்னாள் படை வீரர்களுக்கு மிகக்குறைவான ஓய்வூதிய நிலுவைத்தொகை கிடைப்பதன் காரணமென்ன?
   -லெப்டினன் கர்னல். பழனி சாமி (ஓய்வு)
            [ இது Brig C S Vidyasagar ஆங்கிலத்தில் Why Are You Getting So Low Pension Arrears?என்ற தலைப்பில்  ‘https://thetsewablog.wordpress.com ‘ என்றவலைப்பதிவில்  12 -11- 2015 வெளியிட்ட  கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது ]
                                                            
 அன்புள்ள JCOs, NCOs, OR மற்றும் குடும்ப ஓய்வூதியம் (பென்ஷன்) பெற்று வரும் நண்பர்களே,
கடந்த ஜனவரி 2006 லிருந்து  30 ஜூன் 2012 வரைக்கும் ஆன காலகட்டத்தில் ஏன் உங்களுக்கு மிகவும் குறைந்த அளவு ஓய்வூதிய நிலுவைத்தொகையே கிடைக்கவுள்ளது என்பதை கட்டாயம் நீங்கள்  அறிய வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 2006 தேதிப்படிக்கான பென்சனை எப்படி கணக்க்கிட்டிருக்கிறது  என்பதை விவரித்து, பின்னர் ஏன் மிகக்குறைந்த ஓய்வூதிய உயர்வையே PCDA (P) அலஹாபாத் அண்மையில் வெளியிட்டுள்ள சர்குலர் 547 அளிக்கவிருக்கிறது என்பதை விளக்குகிறேன்.
பாதுகாப்பு அமைச்சகத்தைப் பொருத்தவரை ஜனவரி  2006 தேதிப்படிக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகை என்பது சர்குலர் எண்களின்  (Circulars 547 & 379) வித்தியாசமே ஒழிய வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! 
 ஜனவரி 2006 க்கு முன்பு ஒரு ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாய் 15 ஆண்டு பணிகாலத்துகுப் பின்பு மாதம் ரூ  4,300.௦௦ அடிப்படை சம்பளமாகப் பெற்று வந்தார். ஐந்தாவது சம்பளக் கமிசனில் ரூ 32500 -700- 4300.௦௦ என்ற சம்பள அளவுப்படி இந்த ரூ 4,300 ஒரு ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாயின் உச்சநிலை சம்பளம் ஆகும். அதே ‘ Y’ குரூப் சிப்பாயின்  சம்பளம்  ஜனவரி 2006ல் ஆறாவது சம்பளக் கமிசனின் சம்பளவிகிதப்படி மாதம் ரூ 12,000. (Pay Band ரூ 8000 + Grade Pay ரூ 2000 + MSP ரூ 2000 ஆக மொத்தம் ரூ 12,000). அதாவது , ஜனவரி 2006ல் இவர் ஓய்வு பெறும்போது ஓய்வூதியமாக மாதம் ரூ 6,000/- பெறுவார் (கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதி அளவு).
உச்ச நீதிமன்றம் மேஜர் ஜெனெரல்  எஸ் பி எஸ் வைய்ன்ஸ் Vs UOI - 2008 என்ற வழக்கில் 2006 ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்ற பென்சனர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும்  பயன்கள் ( benefits ) அனைத்தையும் 2006 ஆண்டுக்கு முன்னர் ஒய்வு பெற்ற பென்சனர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின்படி’ Y’ குரூப் சிப்பாய்க்கு 15 ஆண்டு கால சேவைக்குப் பின் மாதம் ரூ 6,000/- பென்சன் கிடைக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசு இதே சேவைக் கால சிப்பாய்க்கு சர்குலர் 547 ன்படி என்ன கொடுத்த்திருக்கிறது?
PCDA (Pension) அலஹாபாத் பென்சன் கணக்கீட்டு அதிகாரிகள் 15 வருடம் சேவை முடித்த ஒரு ‘Y’ குரூப் சிப்பாயை ஒரு வருட சேவை கூட முடிக்காத சிப்பாய்க்கு சமமாகக் கருதி  சம்பளப்ப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். அவரின் 2006 க்கு முந்தய அடிப்படை சம்பளமான ரூ 3,250 க்கு இணையாக, உத்தேச சம்பளத்தை ரூ 10,250 என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இது ஜனவரி 2006 ல் சிப்பாயின் 15 வருட பணிக்காலத்தை பூஜ்ய கால சேவைக்கு சமமாகக் கருதி கணக்கிட்டதற்கு ஒப்பாகும். அது மட்டுமல்லாமல் இப்பட்டியல் Special Army Instructions (SAI) - 1/S/2008 இன் படிதான் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள்.
இந்த ஓய்வூதியமும்  33 வருடம் சேவைக் காலம் முடித்திருந்தால்தான் முழுமையாகக் கொடுக்கப்படும். சேவைக்காலம் அதற்கு குறைவாக இருந்தால் அதே விகிதத்தில் ஓய்வூதியமும் குறைத்து வழங்கப்படும். ஒரு சிப்பாயின் பணிக்காலம் 15 வரு டத்தில் (17 வருடமாக இப்போது உயர்த்தப்பட்டுள்ளது) முடிந்து விடுகிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட! இவ்விதம், 15 வருட காலம் பணிமுடித்த ‘ Y’ க்ரூப் சிப்பாயின் மாத ஓய்வூதியம் ரூ 3,883 {= 5120 x (15 +10)/33} ஆக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகியவர்களின் ஓய்வூதியம் இவ்வளவு குறைவாக இருப்பதன் அடிப்படைக் காரணம்.  இதை விட அர்த்தமற்ற சம்பள விகித அமைப்பு இருக்க முடியுமா?
Pay Band – 1 ல் சம்பள விகிதம் ரூ 5200 - 22000 த்துடன் Grade Pay ரூ 2000 மும் ராணுவ சேவை படி(MSP) ரூ 2000௦௦௦ மும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிப்பாயின் 15 வருட சேவைகாலத்தைக் கருத்தில் கொண்டு அதற்குரிய உத்தேச அடிப்படைச் சம்பளமாக  ரூ 5200+ 3 % என்ற அடிப்படையில் வருடாந்திர உயர்வை கணக்கிட்டிருந்தால் அது S A I - 1/S/2008 இல்  கொடுத்துள்ளபடி ரூ 12,000/- ஆக இருந்திருக்கும்.
1 5  வருடம் சேவை முடித்த ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாய்களின் பென்சன் அவர்கள்  2006 க்கு முன்னரோ அல்லது பின்னரோ எப்போது ஓய்வு பெற்றிருப்பினும் மாதம் ரூ 6,000/- ஆக அமைக்கப்படிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம்  அமைக்கப்படவில்லை.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் 1973 லிருந்து சிபாய் – ஹவில்தார் களுக்கு நஷ்டம் விளைத்த இந்த ‘ 33 வருட பணி’ என்ற விதி 2006 க்கு முதலில் ஒய்வு பெற்றவர்களுக்கும்   சேர்ந்து இப்போது ஒழிந்தது !
திரு எம். ஓ. இனாசு என்ற முன்னாள் படை வீரர் பணி ஓய்வு பெற்றபின் கேரளாவில் உதவி அலுவலக மேற்ப்பார்வையாளர் என்ற  மத்திய அரசின் பணியில் சேர்ந்தார். அதிலிருந்தும் ஓய்வு பெற்றபின்  அவர் 2006ஆம் வருடத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான  இந்த ‘33 வருட பணி ’ என்ற விதியை எதிர்த்து எர்ணாக்குளம் C A T (Central Administrative Tribunal)   இல் வழக்குத் தொடர்ந்தார். CAT எர்ணாக்குளம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து  விட்டபோதிலும் மனம் தளராது  கேரளா உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். கேரளா உயர் நீதிமன்றம் CAT எர்ணாக்குளத்தின் தீர்ப்பு செல்லத் தக்கதல்ல என்று முடிவு செய்ததன் பேரில், CAT எர்ணாக்குளம் 2006 க்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கியதைப் போலவே 2006 க்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்கும் (எஸ் பி எஸ் வைன்ஸ் Vs UOI வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப் போல) பென்சன் வழங்க மத்திய அரசுக்கு உத்திரவிட்டது.
            மத்திய அரசு விட்டு விடுமா? CAT எர்ணாக்குளத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டைத்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. எனவே மத்திய அரசுக்கு  ஓய்வூதியம் அமைப்பதில் ‘33 வருட பணி விதியை 2006 க்கு முந்தைய எல்லா மத்திய அரசு ஊழியர்களுக்கும் நீக்குவதைத் தவிர்த்து வேறு வழி இல்லாமல் போனது. ஆகவே இப்பொழுது , Ministry of Personnel, Pensions and Public Grievances என்னும் மத்திய அமைச்சகம்  33 வருட பணி’ விதியை நீக்கவுள்ள அரசானைக் கடிதத்தை அனுப்ப இருக்கிறது .
சரி, இனி சிப்பாயிலிருந்து - மேஜர் ஜெனெரல் வரைக்குமான எல்லோர் ஓய்வூதியத்திலும்  இது என்ன விளைவை ஏற்ப்படுத்தப் போகிறது?  
ரேங்க் வெய்டேஜ் உடன் 33 வருடம் பணிக்காலம் முடித்திராதவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்த பட்ச பணிக்காலம் முடித்திருந்தால் (அதாவது சிப்பாய்க்கு 15 வருடமும், அதிகாரிகளுக்கு 20 வருடமும் ) முழு ஓய்வூதியம் கிடைக்கபெறும். பதினைந்து வருடம் பணி காலம் முடித்த ’ Y ‘ குரூப் சிப்பாய் ஒருவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?  2006 க்குப்பின்னர் ஓய்வடைந்த அதே குரூப்பைச் சார்ந்த அதே அளவு பணி காலம் முடித்த சிப்பாய்க்கு எந்த அளவு கிடைக்குமோ அதே தொகை தான், அதாவது   ரூ 6,000௦௦௦ கிடைக்க வேண்டும்.
அப்படியானால் நிலுவைத்தொகை எவ்வளவு? உதாரணத்துக்கு, 15 வருடம் பணி முடித்த சிப்பாய்க்கு மாதம் ரூ 6000 – ரூ 3883 (சர்க்குலர் 547 படி ) = ரூ 2,117. இத்துடன் இதற்குரிய பஞ்சப்படி(DR) யும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்நிலையில் அரசு என்ன செய்யவிருக்கிறது? ஜனவரி 2006 லிருந்து 2015 வரைக்குமான நிலுவைத்தொகை வழங்குவதைத் தவிர்க்க முயற்ச்சிக்கலாம். இதற்காக  நிலுவைத் தொகை ஏதும் இல்லாதவாறு எல்லோரது ஓய்வூதியத்தையும் ஜனவரி 2006 இன்படி திருத்தி அமைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால் நிலுவைத் தொகை ஏதும் இராது.
அல்லது உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து, அதாவது 2015இலிருந்து மட்டும் ஓய்வூதியத்தைத் திருத்தி அமைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால் ஓய்வூதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.
ஆனால் அரசு அவ்வாறு செய்வது நியாயமான செயலாகுமா? உச்ச நீதி மன்றம்  எஸ் பி எஸ் வைன்ஸ் Vs UOI  வழக்கில் வழங்கிய தீர்ப்புப்படி பார்த்தால் அது முற்றிலும் தவறான செயலாக முடியும்.
இது குறித்து TSEWA என்ன செய்யவிருக்கிறது? நாம் (TSEWA) நிலுவைத்தொகை 2006 இலிருந்து வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் வலியுறுத்த இருக்கிறோம். அதற்காக நீங்கள் TSEWA வில் உறுப்பினர்களாகச் சேர்வீர்களானால் கணிசமான அளவு JCO, NCO, OR மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் சேர்ந்தவுடன், Armed  Forces Ttribunal (AFT) டெல்லியில் வழக்குத் தொடர்வோம். அவசியப்பட்டால் உச்சநீதி மன்றம் வரை வழக்கை எடுத்துச் செல்வோம்.
‘Y’ குரூப் சிப்பாய்க்கு மாதத்திற்கு ரூ 2,117 + DR என்ற விதத்தில், உங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
நான் சொல்வது சரிதான்  என்று நீங்கள் உணர்ந்தால் TSEWA வில் நீங்கள் உருப்பினராகச் சேர்ந்து நமக்கு நேர்ந்துள்ள அநீதியை எதிர்த்து வழக்குத் தொடுத்துப் போரிடலாம்.
மற்ற விபரங்களுக்கு கீழ்க்கண்ட  கைபேசி எண்ணிலோ அல்லது  .......  என்ற இமெயில் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

[Note:  Brig C S வித்யாசாகர்   முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க” (Triservices Veterans Welfare Association – TSEWA ) தலைவர். இவர் Bombay Engineering Ggroup ஐ சார்ந்த இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி.  இவ்வமைப்பு முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய அரசு இழைத்து வரும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது   
  திரு. Lt.Col.பழனிச்சாமி அவர்கள் தற்போது ராஜஸ்தானில் வசித்து வருகிறார்கள்.
தொடர்பு கொள்ள கைபேசி எண் : 9968253110 and 8875448800.

இந்த கட்டுரையை நன்கு படித்து புரிந்துகொண்டு பின்னர் Brig.வித்யா சாகர் அல்லது Lt.Col.N பழனிச்சாமி அவர்களை தொடர்பு கொள்ளவும். 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.









எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...