Sunday 23 November 2014

ஒரு SMS மூலம் உங்கள் சரியான பென்சனை தெரிந்து கொள்ளுங்கள்


ஒரு SMS மூலம் உங்கள் சரியான பென்சனை
தெரிந்து கொள்ளுங்கள்
(Know your pension through one SMS)

தற்போதுள்ள அரசாணைகளின் படி ஒரு ராணுவ பென்சனரின் பென்சனையும், ராணுவ குடும்ப பென்சனரின் பென்சனையும் நிர்ணயிப்பது கீழ் கண்ட காரணிகள்.

ரேங்க்
எத்தனை ஆண்டு சர்விஸ்
குருப்
பிறந்த தேதி
இறந்த தேதி
இயலாமை பென்சன் சதவீதம்
பென்சனில் வந்ததற்கான  காரணம் 
PPO நம்பர்

மேற்கண்ட விபரங்கள் முழுவதும் வங்கியிடம் இருந்து அதை சரியான முறையில் செயல்படுத்தும் போது தவறான  பென்சன் வழங்க வாய்ப்பே இல்லை.  ஒருவேளை வங்கியிடம் இல்லாமல் இருந்து இதை பென்சனர்கள் உரிய முறையில் வங்கிக்கு தெரியபடுத்தும் போது சரியான பென்சன் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இந்த சூழ்நிலையில் ஏன் பல பென்சனர்களுக்கு சரியான பென்சன் வழங்கப்படவில்லை ?  காரணம்  வங்கிகளும் பென்சனர்களும் இது பற்றி சீரிய முயற்சி எடுக்கவில்லை.    தவிர ஒரு பென்சனருக்கு பல ஆணடுகளாக சரியான பென்சன் வழங்காத வங்கி மீதும், வங்கி அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமில்லை.  கால தாமதமாக வழங்கப்படும் பென்சன் நிலுவை தொகைக்கு வட்டி மட்டும் 01.10.2008 முதல்  வழங்க RBI சர்குலர் மட்டும் அனுப்பி உள்ளது. இதை எந்த வங்கியும் கண்டு கொள்வதில்லை.

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு பென்சனரும் தன் சரியான பென்சனை தெரிந்து கொள்ள எங்களது சிறிய முயற்சிதான் இந்த “ SMS மூலம் சரியான பென்சனை தெரிந்து கொள்ளும் திட்டம்” .  எனவே உங்கள் சரியான பென்சனை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முறையில் எங்களுக்கு SMS அனுப்பவும்:-

நீங்கள் SMS அனுப்ப வேண்டிய மொபைல் எண். 9894152959 அல்லது 9786449036

அனுப்ப வேண்டிய முறை:-

1.    Name                    <                                  >
2.    Rank                     <                                  >
3.    Length of service  <                                  >
4.    Group                    <                                  >
5.    Date of birth          <                                  >
6.    Disability %           <                                  >
7.    PPO No.               <                                  >
8.    Present Pension   <                                  >
9.    Bank name           <                                  >

குடும்ப பென்சனர்கள் தனியாக அனுப்ப வேண்டிய முறை:-

1.    Name of pensioner           <                      >
2.    Name of husband             <                      >
3.    Service years                   <                      >
4.    Group                                <                      >
5.    Date of birth of husband   <                      >
6.    Date of death of husband <                      >
7.    PPO No.                           <                      >
8.    Present pension                <                      >
9.    Bank name                       <                      >

சிரமத்தை பார்க்காமல் சரியான முறையில் SMS அனுப்பினால் உங்களுடைய சரியான பென்சன் என்ன என்பதை SMS மூலம் 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்க படும். கட்டாயம் அடைப்பு குறியை <  > உபயோகித்து தவல்களை அனுப்பவும்.  தவறான குருஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப இயலாது.  நீங்கள் அனுப்பும் SMS களை உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் மொபைல் போனுக்கு அனுப்பி சரிபார்த்து கொள்ளுங்கள்.

நம் எல்லோரிடமும் மொபைல் போன் இருப்பதாலும் அதை நல்ல முறையில் பயன் படுத்தி  நவீன தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் சேவை தான் இது என்பதை நினைவில் கொள்ளவும்.

25 லட்சம் ராணுவ பென்சனர்களை கொண்ட இந்த நாட்டில் இது வரை யாரும் சிந்திக்காத ஒரு புதுமையான, எழிமையான ஒரு முறையை தமிழ் பேசும் ராணுவ பென்சனர்களுக்கு முதல் முறையாக அறிமுகபடுத்துகிறோம்.  இதன் வெற்றி நீங்கள் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.
இதை படிக்கும் இணையதள வசதி உள்ள நண்பர்கள், இதை அச்சிட்டு அனைவருக்கும் கொடுத்து உதவவும்.  முடிந்தால் கன்டீனிலும், நமது பாலி கிளிநிக்கிலும் நோட்டிஸ் போர்டில் ஒட்டவும்.

இந்த முயற்சி தமிழ் நாட்டில் வெற்றிபெற்றால் நாடு முழுவது உள்ள ராணுவ பென்சனர்களுக்கு விரிவாக்க படும்.  இதன் மூலம் உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். 

இந்த செய்தி  சமூக வலை தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பார்த்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம் 


Friday 21 November 2014

தாமதமாக வழங்கப்படும் பென்சன்


தாமதமாக வழங்கப்படும் பென்சன் நிலுவை தொகைக்கு
வங்கிகள் தானாக முன்வந்து 8% வட்டி வழங்க வேண்டும்.

தாமதமாக வழங்கப்படும் பென்சன் நிலுவை தொகைக்கு (Delayed payment of revised pension arrears) வங்கிகள் 01.10.2008  முதல் 8% வட்டி வழங்க வேண்டும் என்று மேற் கூறிய சுற்றறிக்கைகள் கூறுகின்றன.

ஆனால் நடைமுறையில் யாருக்கேனும் எந்த வங்கியும் கொடுத்தகாக தகவல் இல்லை.  காரணம் நம்மில் பலருக்கு இது பற்றி தெரியவில்லை.  அப்படி தெரிந்திருந்தாலும் வங்கிகளிடம் போராடி வாங்கும் திறமையும் கிடையாது.  நமது அறியாமையின் காரணமாக ஒரு இனம் கை ஏந்தும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை நினைக்கும்போது மனம் வேதனைபடுகிறது.

அனைத்து ராணுவ பென்சனர்களுக்கும் குடும்ப பென்சனர்களுக்கும் 24.09.2012 முதல் பென்சனை மாற்றி அமைக்க CDA  சுற்றறிக்கைகள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இன்னும் பெரும்பாலான பென்சனர்களுக்கு பென்சன் மாற்றி அமைக்க படாமல் இருக்கிறது.  புதிய மாற்றி அமைக்க பட்ட  பென்சனானது ஒரு பென்சனரின் ரேங்க், சர்விஸ், மற்றும் அவருடைய குருப்பின் அடிப்படையிலேயே அமையும்.  இந்த மூன்று முக்கிய காரணிகளும் வங்கிகளிடம் இல்லாத பட்சத்தில் அவர்களால் உங்களுக்கு சரியான பென்சன் வழங்க முடியாது.

ஆகவே ஒவ்வொரு பென்சனரும் தன்னுடைய ரேங்க், சர்விஸ் மற்றும் குருப் இவற்றை குறித்து அதற்குரிய பென்சனை CDA  சர்குலர் படி குறித்து உரிய சான்றுடன் வங்கிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.  அல்லது மொபைல் போன் மூலம் முழு விபரங்களை எங்களுக்கு SMS அனுப்பி அதன் வழியாக சரியான பென்சன் பெற்று கொடுக்க ஒரு புதிய முயற்சியை விரைவில் எங்கள் எக்ஸ் வெல் அறக்கட்டளை  அறிமுகபடுத்த இருக்கிறது. 

சமீபத்தில் தற்செயலாக எங்களை சந்தித்த ஒரு குடும்ப பென்சனரின் பென்சனை சரிபார்க்கும் போது அவருக்கு மாத அடிப்படை பென்சன் ரூ.8154 கொடுப்பதற்கு பதிலாக வெறும் ரூ.3500 மட்டுமே கடந்த 26 மாதமாக வழங்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் எங்கள் முயற்சியால் அவருக்கு ரூ.175000 நிலுவை தொகையும் ரூ.10000 நஷ்ட ஈடும் ஒரு புகழ் பெற்ற பெரிய வங்கியில் இருந்து பெற்று கொடுத்தோம்.  சமீப காலமாக இது போன்ற குறைபாடுகள் அதிக அளவில் எங்களிடம் வருகின்றன.

தனது 27 வயதில் 4 குழந்தைகளுடன், ராணுவ சேவையில் கணவனை இழந்த ஒரு விதவைக்கு 1967 முதல் விசேஷ குடும்ப பென்சன் வழங்கியது அரசு.  ஆனால் விசேஷ பென்சனுக்கும் சாதாரண பென்சனுக்கும் வித்தியாசம் தெரியாத வங்கி வெறும் சாதாரண பென்சனே கடந்த 18 வருடமாக வழங்கி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.11,34,000 அரியர் பெற்று கொடுத்தோம்.  தாமதமாக வழங்கப்பட்ட இந்த தொகைக்கு உரிய நஷ்ட ஈடாக ரூ.438000 கேட்டு வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

பல நூற்று கணக்கான பென்சனர்களுக்கு கடந்த ஆறு வருடமாக சேவை செய்து சுமார் 5 கோடிக்கு மேல் பென்சன் அரியர் பெற்று கொடுத்திருக்கிறோம்.  அந்த சமயத்தில் வங்கிகளிடம் இந்த நஷ்ட ஈட்டை கேட்டு வாங்க சிந்திக்க வில்லை.  ரூ.5 கோடிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு 8 சதவீத வட்டி நாங்கள் முனைப்போடு செயல் பட்டிருந்தால் ரூ.2 கோடி வரை அபராத  வட்டியாக பெற்று கொடுத்திருக்கலாம்.  நம் எல்லோருக்கும் மிகுந்த விழிப்புணர்வு அவசியம் என்பதை இப்போது தெரிந்து கொண்டோம்.

விரைவில் அறிமுகபடுத்த படும் எங்கள் திட்டத்தின் பெயர் “KNOW YOUR CORRECT PENSION THROUGH SMS”  “குறுஞ் செய்தி மூலம் சரியான பென்சன் அறியும் திட்டம் “.

         "தெரிந்து  கொண்டிருப்பது  ஒரு ஆயுதம்  வைத்திருபதற்கு  சமம் "




Thursday 20 November 2014

ஜீவன் பிரமாண் (Digital Life Certificate)


ஜீவன் பிரமாண்
டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்
DIGITAL LIFE CERTIFICATE

நமது பிரதமர் அவர்கள் கடந்த 10.11.2014  அன்று தொடங்கி வைத்த “ஜீவன் பிரமாண்” திட்டத்தின் முழு விவரங்களும் கீழ் கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நவீன தகவல் தொழில் நுட்பத்தில் நாம் கொண்டுள்ள செயல் திறைமையால்
தொலைநோக்கு நோக்கம் கொண்டு உலகின் சிறந்த இந்திய
மென் பொருள் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட
“ஆதார்”
ஒரு சாதாரண மனிதனின் அடையாளமாக,
125 கோடி மக்களையும் அடையாளம் காணும்
ஒரு சிறந்த மென்பொருளை அடித்தளமாக கொண்டு
உருவாக்கப்பட்டதுதான் இந்த
“ஜீவன் பிரமாண்”

இனி மத்திய மாநில அரசு பென்சனர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 
மற்றும் ஏப்ரல்
மாதங்களில் வங்கிக்கோ அல்லது மாவட்ட கருவூலதிர்க்கோ நேரில் சென்று
வாழ்க்கை சான்றிதழ் (Life Certificate) வழங்க வேண்டியதில்லை.
தங்கள் வீட்டில் உள்ள கணிப்பொறி மூலமோ அல்லது தங்கள்
சொந்த அண்ட் ராய்டு மொபைல் மூலமோ அல்லது அருகிலுள்ள
இன்டர்நெட் சேவை மையம் மூலமாகவோ அல்லது ஒரு சில அரசு
அலுவலககங்கள் மூலமாகவோ வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை
சான்றிதழை பதிவு செய்யலாம்.  இந்த திட்டத்தால் சுமார்
ஒரு கோடி பென்சனர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையானவை
ஆதார் அடையாள அட்டை
பென்சன் ஆணை எண்.
வங்கி சேமிப்பு கணக்கு எண்.
வங்கி பெயர், கிளை
உங்களுடைய மொபைல் போனும்
அதன் எண்ணும்.
(அண்ட் ராய்டு போனாக இருந்து அதனுடன் கைரேகை
பதியும் கருவியும் இருந்தால், இதை வைத்தே நீங்கள் அனைத்து
பணிகளையும் வீட்டிலிருந்தே முடித்து விடலாம்.)
ஒரு சேவை மையம் மூலமாக செய்வதானால் மேற்கூறியவற்றை  
எடுத்து சென்று, உங்கள் கை ரேகையோ அல்லது கண் விழி பார்வையோ ஸ்கேன்
செய்யப்பட்டு, இணைய தளத்தில் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு வாழ்க்கை சன்றிதால்
அச்சிட்டு வழங்கப்படும்.  நீங்கள் வங்கிக்கு செல்லாமலே இதே இணைய
தளத்தில் இருந்து உங்கள் உயிர் சான்றிதழை பெற்று கொள்வார்கள்.

மேற்குறிப்பிட்ட இணைய தளத்தை கொஞ்சம் 
முயற்சி செய்து திறக்கவும்.

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு 
"ஜீவன்  பிரமாண்" சான்று வழங்குவது 
எளிமையக்கபட்டு விட்டது.

இதே போல் ஒருவர்  உயிரோடு இல்லை  என்பதற்கு 
இதேபோல் எளிமையான சான்றளிக்கும் 
முறை கொண்டுவரப்படுமா ?

செயல் படுத்த சிந்திபீர் 






Tuesday 4 November 2014

CDA சர்குலர் 527 dated 25.4.2014 காலம் கடந்து வந்திருக்கும் சுற்றறிக்கை



 
Will this government take any action ?
CDA  சர்குலர் 527 dated 25.4.2014
காலம் கடந்து வந்திருக்கும் சுற்றறிக்கை

நாட்டை காக்கும் பணியில் சேர்ந்து போரில் உயிர் நீத்தால்தான் அவர் குடும்பத்துக்கு ஏதாவது கிடைக்கும்.  அல்லாமல் குண்டடி பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாக  திரும்பினால் அவர்களைபோல் பாவம் செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

கார்கில் போரில் லெப்டினென்ட் சௌரப் காலியா வுடன் சிறைபிடிக்கப்பட்ட நமது ராணுவ வீரர்களின் கதி என்ன ஆனது என்பது இந்த நாடே அறியும்.  நமது வீரர்கள் ஐந்து பேரை சித்ரவதை செய்து அடையாளம் காணமுடியாதபடி உடலை ஒப்படைத்த பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்திய அரசு.  கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக நீதி கேட்டு அலைகிறார் அவர் தந்தை டாக்டர் காலியா. பாகிஸ்தானை போர் குற்றம் புரிந்த நாடாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசால் முடியவில்லை.  அரசுக்கு நம் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  1971 போரில் சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் படை வீரர்களை சரணடைய வைத்து ராஜ மரியாதையுடன் விடுவித்த இந்திய அரசும்,  இந்திய  ராணுவமும் நமது   வீரர்கள் 57 பேர்களை பாகிஸ்தான் சிறைகளில் இருந்து இன்று வரை விடுவிக்க முடிய வில்லை.  நமது நிர்வாக சீகேடுக்கும், திறமையில்லாத ஆட்சிக்கும் இது ஒரு உதாரணம்.  நமது தலைவர்கள் வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது.  செயலில் காட்டவேண்டும்.  நமது ராணுவம் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றால் என்ன ஆகும் என்பதை எண்ணி பார்க்கவேண்டும்.

ஊனமுற்ற படை வீரர்களின் பென்சனை நிர்ணயிப்பதில் பல முரண்பாடுகள் உள்ளது.  சாதாரண படை வீரர்களுக்கு இது சம்பந்தமாக உதவி செய்ய நல்ல அமைப்புகள் தேவையான அளவு இல்லாததால், இதை பயன் படுத்தி ஈவு இரக்கமில்லாத ராணுவ அமைச்சகம் இழைத்த அநீதிகள் எண்ணிலடங்கா.  துதரிஷ்ட வசமாக இதை எதிர்த்து போராட வழியில்லாமல், வாயில்லா பூச்சிகளாக  மடிந்தவர்கள் ஏராளம்.

“உனது இயலாமை 20% க்கு குறைவாகவும் சர்விஸ் பத்து வருடம்   இல்லாததாலும் உனக்கு ஒரு பென்சனும் கிடையாது” என்று 1.3.1968 க்கு முன்னர் பல ஊனமுற்ற வீரர்கள் ஈவு இரக்கமின்றி வெளியேற்றபட்டனர்.  பின்னர் 1.3.68 முதல் 1.1.73 வரை ஐந்து வருட சர்விஸ் இல்லாமல் ஊனமுற்றவர்களுக்கு  ஒன்றும் இல்லை என்றது அரசு.  குறிப்பிட்ட தேதியை காட்டி பல வீரர்களின் வாழ்க்கையை இளமையிலேயே சோகமக்கியது இந்த அரசு.  இதே நிலைமை ஒரு சிவிலியனுக்கு ஏற்பட்டும் பட்சத்தில்  அவர்களுக்கு 60 வயது வரை பாதுகாப்பான பணி வழங்கி பின்னர் பென்சனும் வழங்கபடுகிறது.  இந்த சட்டம் ராணுவ வீரர்களுக்கு பொருந்தாது என கூறிவிட்டது அரசு.  ஆனால் இன்று ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி காலத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டு வெளி வர நேர்ந்தால் இவர்களுக்கு பென்சன் மற்றும் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி.  பாதிக்கப்பட்ட அனைவரும் இன்று நம்மை விட கஷ்ட மான சூழ்நிலையில் ராணுவ பணி செய்த நம் மூத்த குடிமக்கள்.  இவர்களை ஏமாற்றும் இந்த அரசு அதிகாரிகளுக்கு கடவுள் நிச்சயம் ..........

1.3.68 இல் மறுக்கப்பட்ட பென்சன் தற்போது 46 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் என்று கூறுகிறது CDA  சர்குலர் 527. ஒருவேளை அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால் அவர் மனைவிக்கு குடும்ப பென்சன் வழங்கப்படும் என்கிறது இந்த சுற்றறிக்கை.  இந்த ஆணையை வெளியிடுவதில் நமது ஜனாதிபதி மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறது அந்த சர்குலர். என்ன கொடுமை இது ?

1.3.68 இல் 30 வயதானவர் இன்று உயிரோடிருந்தால் அவர் வயது 76 க்கு மேல் இருக்கும்.  ஒரு ராணுவ வீரனுக்கு  46  வருடமாக கொடுக்க முடியாது என கூறி வந்த அரசு அவன் சாகும் தருவாயில் இந்த சர்குலர் விடுவதில் யாருக்கு என்ன பயன்.?

இந்த சுற்றறிக்கையை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் துளி அளவிலும் அரசுக்கு இருக்குமானால், இந்த நாடெங்கிலும் உள்ள பல ராணுவத்தினர் நல சங்கங்களுக்கு அல்லவா இதை அனுப்பியிருக்க வேண்டும்.  நீங்கள் இந்த சுற்றறிக்கையை நன்கு கவனித்தால்,  இதை பெறுபவர்களின் பட்டியலில் சுமார் ஐம்பது பேருக்கு மேல் உள்ளது.  அதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பெயர் கூட இல்லை.  தகவல் பெரும் உரிமை சட்டத்தின் மூலம்தான் நாம் பெறவேண்டும் என்ற அவல நிலை உள்ளது.

கடந்த 30 வருடங்களாக ராணுவ பென்சனர்களுக்கு தொடர்ந்து பல விதத்தில் சேவை செய்து வந்த நாங்கள், அந்தந்த சமயங்களில் 20% க்கு குறைவாக இயலாமை அடைந்தவர்கள் பென்சன் கேட்டு எங்களிடம் வந்தபோது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறி விட்டோம்.  அவர்கள் பெயர் முகவரிகூட நாங்கள் எழுதி வைக்காமல் விட்டுவிட்டோம் என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  அவர்கள் இப்போது இருக்கிறார்களா இல்லையா, இருந்தால் எங்கு இருக்கிறார்கள், இல்லாவிட்டால் அவர்கள் மனைவி எங்கு இருக்கிறார்கள் என்ற விபரம் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசில் பணியாற்றி இறந்து போன முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க தமிழக அரசின் ஆணைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.  எத்தனையோ விண்ணப்பங்கள் அனுப்பியும் எந்த செயல்பாடும் இல்லை.

கான்டீன் மூலமும், முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் மூலமும் யாரவது இருப்பார்களா என்று தேடி வருகிறோம்.  உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும். கண்ணை கெடுத்த பின் சூரிய நமஸ்காரம் செய்ய சொல்வதுபோல் இருக்கிறது நமது அரசின் செயல்பாடுகள்.  வேலையில்லா கொடுமையால் ராணுவத்தில் சேரும் நிலை மாறி நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும்  கட்டாய ராணுவ சேவை செய்யவேண்டும் என்ற நிலை வந்தால் தான் இந்த நிலை மாறும்.




எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...