Tuesday 30 July 2013

பென்சன் அரியர் இன்னும் வழங்கவில்லை


 
பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம்.
மேம்படுத்த பட்ட பென்சன் விகிதங்களை
இன்னும் வங்கிகள் வழங்க வில்லை.

இராணுவ பென்சனர் அனைவருக்கும் 24.09.2012 முதல் பென்சன் மாற்றி அமைக்க பட வேண்டும் என்று கடந்த 17.01.2013 அன்றே அரசாணைகள் வெளியிடப்பட்டன.  தற்போது ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் பெரும்பாலான இராணுவ பென்சனர்களுக்கும், குடும்ப பென்சனர்களுக்கும் இந்த பென்சன் மாற்றி அமைக்க பட வில்லை.

அனைத்து வங்கிகளும் பென்சன் கணக்கிடும் பணிகளை தனது தலைமை அலுவலகத்துக்கு கொண்டுசென்று விட்டதால், பென்சனர் குறைகளை அருகிலுள்ள கிளைகள் கண்டுகொள்வதில்லை.  பெரும்பாலான பென்சனர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சிவனே என்று இருந்து விடுகின்றனர்.  வங்கிகளும் கண்டு கொள்ளாமல் அப்படியே பென்ஷனை மாற்றி அமைக்கமால் விட்டு விடுகின்றன.

தமிழ் நாட்டில் குறிப்பாக இந்தியன் வங்கியும், இந்தியன் ஓவர் சீஸ் வங்கியும் இந்த பென்சன் மாற்றி அமைக்கும் பணியை ஆர்வமுடன் செய்வதாக தெரிய வில்லை.  புகார்களை கண்டு கொள்வதே இல்லை.  தாமதமாக வழங்கப்படும் பென்சனுக்கும், நிலுவை தொகைக்கும் வங்கிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி கடிதங்கள் அனுப்பியும், பாங்கிங் ஆம்புட்ஸ்மன் என்ற ஒரு குறை தீர்க்கும் அமைப்பு இருந்தும், இந்த பென்சன் வழங்கும் வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை. இது போன்ற நிர்வாக குறைபாடுகள் வங்கிகளின் பெருமையை சீர் குலைக்கும் என்பதை மறக்கலாகாது.

பெரும்பாலான குடும்ப பென்சனர்கள் வயதானவர்கள்.  அவர்கள் உயிருடன் இருக்குபோது கொடுக்கப்படாத இந்த கூடுதல் பென்சன் அவர்கள் இறந்த பின் அப்படியே மறைந்து போகிறது. 
   
இராணுவ குடும்ப பென்சனர்களுக்கு தன் கணவரின் பதவி, பணிக்காலம், பணி பிரிவு போன்ற முக்கிய தகவல்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் காண்டீனில் தன் கணவருக்கு கொடுக்கப்படும் கோட்டாவை மட்டும் நன்கு தெரிந்து கொள்கின்றனர் என்பதுதான் கொடுமை. இந்த கட்டுரையாளர் கடந்த இருபத்தைந்து ஆண்டு அனுபவத்தில் இதை எழுதுகிறார் என்பதை இதை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த அரசாணைகளின்படி ஒரு ஆனரரி கேப்டன் மனைவிக்கு இன்றைய தேதியில் Rs.25,008  கூடுதல் பென்சன் நிலுவை தொகையாக (Pension arrears) வழங்க பட்டிருக்க வேண்டும்.  அதே போல் ஒரு ஆனரரி லெப்டினென்ட் மனைவிக்கு Rs.21,412 நிலுவை தொகையாக வளங்கபட்டிருக்க வேண்டும்.  ஆனால் இன்னும் வழங்கப்பட வில்லை.   இந்த சூழ்நிலையில் இந்த வங்கிகள் நியாயமான முறையில் நஷ்ட ஈடாவது வழங்க வேண்டும்.  நஷ்ட ஈடு முறையே Rs.1,047 மற்றும் Rs.885 வழங்க வேண்டும்.  ஆனால் இந்த வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை.

இதற்க்கு என்னதான் தீர்வு ?  உண்மையில் வங்கிகள் பென்சனர்களின் ஒற்றுமையை பரிசோதித்து பார்க்கின்றன.  பல்லாயிர கணக்கான இராணுவ பென்சனர்கள் அமைதியாக இருப்பதாலும், பென்சன் பற்றி விஷயங்களை தெரியாமல் இருப்பதினாலும்,  பென்சனர் சங்கங்களும் ஆர்வமுடன் செயல் படாத காரணத்தினால் இதுபோன்ற அநீதிகள் நடக்கிறது.  ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து அந்தந்த வங்கிகள் முன் போராடினால்தான் நீதி கிடைக்கும்.  செய்தால் பலன் கிடைக்கும்.  இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.   இது போன்ற நிலை தொடரும்.  ஒரு சமுதாயம் வளர விழிப்புணர்வு வேண்டும்.

Monday 29 July 2013

குடும்ப பென்சனர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.



இராணுவ குடும்ப பென்சனர்கள் அவசியம்
தெரிந்து கொள்ள வேண்டியது

பெரும்பாலான இராணுவ பென்சனர்கள், சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகிய பதவியிலிருந்து பணி விலகி வந்தவர்களாக இருக்கிறார்கள்.  இவர்களது குடும்ப பென்சன் சில தவறான கணக்கீடுகளால் வெறும் Rs.3,500/-  என நிர்ணயிக்க பட்டது.

இந்த தவறான கணக்கீடு 01.01.2006  முதல் 23.09.2012  வரை அமுலில் இருந்தது.   அதாவது 24  ஆண்டு பணிபுரிந்த ஒரு சிப்பாய் மனைவிக்கும் ஒரு ஹவில்தார் மனைவிக்கும் வெறும் Rs.3,500/-  தான் வழங்கப்பட்டது.  இதை சரி செய்ய பல கோரிக்கைகளை அரசிடம் சமர்பித்து, கடைசியில் 24.09.2012  முதல் மட்டுமே கூடுதல் பென்சன் வழங்க ஆணைகள் பிறப்பித்தது.

இந்த அரசாணையின் படி அனைத்து குடும்ப பென்சனர்களுக்கும் 24.09.2012 முதல் பென்சன் மாற்றி அமைக்க படவேண்டும். ஒரு குடும்ப பென்சனருக்கு இப்போதைய சரியான பென்சன் வழங்க கீழ் கண்ட முக்கிய காரணிகள் வங்கிகளுக்கு அவசியம் தேவை.

குடும்ப பென்சனரின் கணவரின் பதவி (Rank)
பணி புரிந்த காலம். (Qualifying Service)
பணி பிரிவு (குரூப்) (Group)

மேற்கண்ட இந்த காரணிகள் அடிப்பைடையில் CDA (P)  தெளிவான பென்சன் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளன.

இதன்படி 24 ஆண்டு சர்வீஸ் முடித்த ஒரு   Y  குரூப் ஹவில்தார் மனைவிக்கு வெறும் Rs.3500  ஆக இருந்த பென்சன் 24.09.2012  முதல் Rs.4425/_  ஆக உயரும்.  ஜூலை மாதம் வரை பென்சன் அரியர்  Rs.16,799/-  வரை கிடைக்கும்.  இது வரை பென்சன் மாற்றி அமைக்க படாதவர்கள், தங்கள் கணவரின் பதவி, சர்வீஸ் மற்றும் குரூப் இவற்றை உடனே தனது வங்கிக்கு தெரியபடுத்தவும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை தனது பென்சன் வழிகாட்டி புத்தகத்துடன் இந்த பென்சன் பட்டியல்களை அச்சிட்டு இலவசமாக வழங்குகிறது.  ஒவ்வொரு பென்சனரும் அவசியம் வைத்துகொள்ளவேண்டிய புத்தகம் இது.  மேலும் உதவிக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகவும்.

Sunday 28 July 2013

முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம்




முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம் (ECHS)

தீராத நோய்களினால் அவதிப்படும் உறுப்பினர்கள் அடிக்கடி நமது கிளினிக்குக்கு வந்து பின்னர் மருத்துவ மனைக்கு செல்வதில் பல சிரமம் இருப்பதால் மருத்துவ மனைக்கு செல்லும் அனுமதி கடிதங்களை (Referral letters) ஆறு மாத காலம் வரை வைத்திருந்து நேரடியாக மருத்துவ மனைக்கு சென்று சேர்ந்து சிகிச்சை பெற இந்த திட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வசதி,  நீரழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், டயாலிசிஸ் செய்து வரும் நோயாளிகள் மற்றும் கேன்சர் நோயாளிகள் இவர்களுக்கு பொருந்தும்.

மேற்கண்ட நோய்களுக்கு சிகிட்சை பெற்று வரும் ECHS  உறுப்பினர்கள் தங்கள் கிளினிக்கில் இருந்து ஆறு மாத காலம் செல்லத்தக்க அனுமதி கடிதங்களை (Referral letters with a validity of 6 months) பெற்று கொள்ளலாம்.  அவசர காலங்களில் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு சென்று பயன்பெறலாம். இந்த கடிதம் அவசர காலங்களில் மிகவும் உபயோகமாக இருக்கும்.

Saturday 27 July 2013

முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் தஞ்சாவூர் கிளை இரண்டாவது ஆண்டு விழா அழைப்பிதழ்


முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் தஞ்சாவூர் கிளை 
இரண்டாவது ஆண்டு விழா   அழைப்பிதழ்.

மிகச்சிறந்த சேவை செய்துவரும் 
இந்த சங்கத்துக்கு 
எமது பாராட்டுக்கள்.



எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...