Wednesday 27 February 2013

பென்சன் அரியர்ஸ் வழங்க ஏன் தாமதம் ?


அரியருக்காக ஆவலுடன் காத்திருக்கும் பென்சனர்கள்
வங்கிகள் பென்சன் அரியர்ஸ் வழங்க 
ஏன் இந்த தாமதம் ?

அரசு ஆணைகள் 17.01.2013  அன்று வழங்கப்பட்டு, உடனடியாக புதிய பென்ஷனை 24.09.2012  முதல் கொடுக்க அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டன.  ஆனால் இதுநாள் வரை எந்த வங்கியும் கண்டுகொண்டதாக தெரிய வில்லை.  இந்த போக்கு நீடித்தால் வங்கிகள் கால தாமதத்திற்கு வட்டியுடன் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை உணரவேண்டும்.

அரசு ஆணைகளை உடனே செயல்படுத்த முடியாத காரணங்களை ஆராய்ந்து அதற்க்கு விடை காண முயல வேண்டும்.  புதிய மேம்படுத்த பட்ட பென்சன் பட்டியல்கள் அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளன.  ஒரு ராணுவ பென்சனர் அல்லது ஒரு ராணுவ குடும்ப பென்சனருடைய கீழ் கண்ட முக்கிய விவரங்கள் வங்கியின் பென்சன் மென் பொருளில் தயாராக இருந்தால் எந்த சிரமும் இல்லாமல் பென்ஷனை மாற்றி விடலாம்.

ஒரு பென்சனருடைய ரேங்க்  (Rank of the Pensioner)
பணிக்காலம்  (Qualifying Service)
குரூப் (Group)

இந்த அடிப்படை தகவல்கள் ஒவ்வொரு வங்கியிலும் உள்ள C.P.P.C  ல் அந்தந்த பென்சனருடைய கோப்புகளில் இருக்கிறது ஆனால் இந்த வங்கிகள் பயன்படுத்தும் பென்சன் மென் பொருளில் இல்லை என்பது தான் பிரச்சனை.  இந்த கோப்புகளில் இருந்து எடுத்து பென்சன் மென்பொருளில் பதிவு செய்ய வங்கிகளுக்கு போதுமான ஊழியர்கள் இல்லை.  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிகள் இருந்தும் வங்கிகள் எந்த முயற்ச்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே ஒவ்வொரு பென்சனரும் காலம் தாழ்த்தாமல் உடனே தாங்கள் பென்சன் பெரும் வங்கிக்கு சென்று மேலே  கண்ட மூன்று தகவல்களையும் கொடுத்து ஈமெயில் மூலம் தங்களுடைய C.P.P.C. க்கு அனுப்ப வலியுறுத்தவும்.

தாமதத்திற்கு தகுந்த ஆதாரத்துடன் நாம் வட்டி கேட்கும் போது எல்லாம் தானாக நடக்கும்.  அது தான் ஒரே வழி என்று தெரிகிறது.

காலம் தாழ்த்துவது நல்லதல்ல.
வங்கிகள்  இதை உணர வேண்டும்






Sunday 24 February 2013

இராணுவ தீர்ப்பாயம்




இராணுவ தீர்பாயங்கள் சாதித்தது என்ன ? 
 
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட இராணுவ தீர்ப்பாயங்கள், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 4000 – 5000 வரை நல்ல தீர்ப்புகள் வழங்கி உள்ளன.  ஆனால் அதில் பெரும்பாலான தீர்ப்புகள் இன்னும் அமுல் படுத்தவில்லை என்பது
மிகவும் வருந்தத்தக்க செய்தி.   சாதாரண படை வீரர்களை உச்ச நீதிமன்றம் வரை
இழுத்தடிப்பதர்க்கு இராணுவ அமைச்சகம் தயங்குவதில்லை.

செயல்படுத்த படாத தீர்ப்புகளுக்கு ராணுவ அமைச்சகத்தின் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாத நிலையும் உள்ளது.  நல்ல தீர்ப்பு பெற்றவர்கள் அதை நடைமுறை படுத்த விண்ணப்பம் கொடுக்காமல் எந்த தீர்ப்பையும் அமுல் படுத்த வேண்டாம் என்று
கடிதங்களும் அனுப்பி உள்ளது.  நீதி, நேர்மையற்ற ஒருசில அரசின் கொள்கைகளை இந்த
தீர்ப்பாயங்கள் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கும்போது
அதை அமுல்படுத்த மறுக்கிறது அரசு.

நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பவர்கள் அரசின் எதிரிகளாக கருதப்படுகின்றனர்.  எந்த ஒரு வழக்கையும் உச்ச நீதி மன்றம் வரை எடுத்து செல்லும் எண்ணத்தில் வாதாடுகின்றனர்
அரசு வழக்கரிஞர்கள். இதை ஒரு சாதாரண படை வீரனால் ஏற்றுகொள்ள முடியாது.
எனவே ராணுவ தீர்ப்பாயம் என்பது வெறும் கண்துடைப்பு போல் தெரிகிறது.
தீர்ப்புகள் அனைத்தும் இராணுவ அமைச்சகத்தை பாதிப்பதால் இந்த
தீர்ப்பாயங்களை இராணுவ அமைச்சகம் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொடுள்ளது.

இராணுவ தீர்ப்பாயங்கள் சுதந்திரமாக செயல்பட இவை சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.  இது சம்பந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
அமுலாகும் போதுதான் விடிவு காலம் பிறக்கும்.

@@@@@@@


Saturday 23 February 2013

சுவிகியா மென் பொருள்



 மேம்படுத்தப்பட்ட பென்சன் விவரங்கள்

“சுவிகியா” மென் பொருளில் தற்போது கிடைக்கிறது.

இராணுவ பென்ஷனை தெரிந்து கொள்ள உதவும் மென் பொருள் “சுவிகியா”.  இதை உருவாக்கியவர்கள் இராணுவ பென்சன் தலைமை கணக்கதிகாரியான  (Controller General of Defence Accounts, New Delhi). 
இராணுவ பென்சனர்களுக்கு நெடுங்கால தேவையாக இருந்த இந்த
இந்த மென் பொருளை உருவாக்கிய CGDA க்கு
எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இது CDGA வின் இணைய தளமான www.cgda.nic.in  இல் கிடைக்கிறது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பென்சன் விவரங்கள் இந்த மென் பொருளில் இணைக்கப்பட்டு
24.09.2012 முதல் கொடுக்கவேண்டிய கூடுதல் பென்ஷனை இந்த மென்பொருள் தெரிவிக்கிறது.

குறுகிய காலத்தில் இதை உருவாக்கி அதை இணைய தளத்தில் அனைவரும் பயன்பெறும் வண்ணம் வெளியிட்ட  இராணுவ கணக்கதிகாரிகளுக்கு
எமது மனமார்ந்த நன்றி.

இந்த மென் பொருள் மூலம் எவ்வாறு உங்கள் பென்ஷனை தெரிந்து
கொள்ளலாம் என்பதை எமது பென்சன் வழிகாட்டி புத்தகத்தில் தெளிவாக கொடுத்துள்ளோம்.  இந்த புத்தகத்தை அனைவரும் வாங்கி
படித்து, ஒவ்வொரு பென்சனரும் தனக்கு எவ்வளவு பென்சன்
கிடைக்க வேண்டும் என்பதை தெரிந்து அதை அச்சிட்டு
 வைத்துகொள்வது  நல்லது.
இது ஒரு அறிய வாய்ப்பு.

Saturday 16 February 2013

என் தேசம என் மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

மருத்துவ செலவு மக்களை 
வாட்டி வதைக்கிறது 
இதற்க்கு என்ன முடிவு ? 

இந்த விஜய் டி.வி. நிகழ்ச்சியை பாருங்கள் 
உடனே நமது மருத்துவ திட்டத்தில் சேருங்கள்

En Desam En Makkal 10-02-2013 - En Desam En Makkal

மேல  உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Thursday 14 February 2013

முன்னாள் படை வீரர் தகுதி.- எக்ஸ் ரிக்ருட்



முன்னாள் படை வீரர் தகுதி
(Ex-servicemen Status to Ex-recruits)

இராணுவத்தில் சேர்ந்து பயிர்ச்சியின்போது காயம் பட்டு, மருத்துவ குழுவால் இராணுவ பணிக்கு தகுதி இல்லாமல் இயலாமை பென்சனுடன் வெளி வந்தவர்கள்
(Ex-Recruits boarded out or relieved on medical ground and granted medical disability pension)  இனிமேல் “முன்னாள் படை வீரர்”களாக கருதப்படுவார்கள்.
இவர்களுக்கு மற்ற முன்னாள் படை வீரர்களிப்போல் வேலைவாய்ப்பில்
அனைத்து முன்னுரிமைகளும் வழங்கப்படும்.

இந்த சலுகை முன்னர் இவர்களுக்கு வழங்கப்படாமல்
இருந்தது.  சமீபத்தில் 04.10.2012 இல் வெளிவந்த அரசு அறிவிப்பு
இவர்களுக்கு “எக்ஸ் சர்விஸ் மென்” அந்தஸ்தையும்
வேலை வாய்ப்பையும் வழங்கும் என்பது நல்ல செய்தி.

இந்த அரசு அறிவிப்பை பெற
இந்த  அரசு அறிவிப்பை 
பல நண்பர்கள் என்னிடம் கேட்டதால் 
இது வெளியிடப்படுகிறது.

Monday 11 February 2013

மேம்படுத்தப்பட்ட குடும்ப பென்சன்



மேம்படுத்தப்பட்ட இராணுவ குடும்ப பென்சன்
(Improvement in Defence Family Pension)

பொதுவாக இராணுவ குடும்ப பென்சனானது ஒரு படை வீரருடைய பதவி (Rank) மற்றும் குரூப் அடிப்படையில் இதுநாள் வரை நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால் தற்போது 24.09.2012 முதல் , ஒரு படைவீரர் பணி புரிந்த காலத்தையும் கணக்கிலெடுத்து நிர்ணயிக்கபடுகிறது. (Qualifying Service) எனவே ஒரு குடும்ப பென்சனருடைய சரியான பென்ஷனை தெரிந்து கொள்ள அந்த படை வீரருடைய கீழ் கண்ட முக்கிய தகவல்கள் தேவை.

     (1) படை வீரருடைய பதவி (Rank)
            (2) படை வீரருடைய பணிக்காலம். (Qualifying Service)
            (3)அவர் வகித்த பணிப்பிரிவு. (Group)

இந்த தகவல்கள் 01.04.1985 க்கு முன்னர் ஒய்வு பெற்று வந்தவர்களின் பென்சன் ஆணைகளிலோ அல்லது இந்த கால கட்டத்தில் இறந்துபோன படை வீரர்களின் குடும்ப பென்சன் ஆணைகளிலோ தெளிவாக இருக்காது.  ஆனால் 01.04.1985 க்கு பின்னர் வெளி வந்தவர்களுக்கு இந்த தகவல்கள் அவர்களுடைய பென்சன் ஆணைகளில் இருக்கும்.

எனவே 01.04.2012 க்கு முன்னர் வெளி வந்தவர்களுக்கு இப்போதைய அரசாணைகளின்படி சரியான குடும்ப பென்சன் வழங்குவதில் வங்கிகளுக்கு சிரமம் உள்ளது.   ஆகவே இந்த குடும்ப பென்சனர்கள் மேலே குறித்த இந்த மூன்று தகவல்களையும் வங்கியில் காண்பித்து அதன் நகல்களை அந்தந்த வங்கியின் மத்திய பென்சன் அலுவலகங்களுக்கு உடனே அனுப்ப வேண்டும். (CPPC) இது முக்கியம்.  புதிய குடும்ப பென்சன் ஆணைகளின்படி ஒரே பதவி, ஒரே குருப்பாக இருந்தாலும் பணிக்காலம் அதிகமாகும் போது பென்சனும் மாறுபடும் என்பதை தெரிந்து கொள்ளவும்.

15 ஆண்டு சர்விஸ் முடித்த “X” குரூப் சார்ஜெண்ட் மனைவிக்கு பென்சன் ரூ.4467.  ஆனால் 20 ஆண்டு சர்விஸ் முடித்த “X”  குரூப் சார்ஜெண்ட் மனைவிக்கு ரூ.4656.

பணிக்காலம் அதிகரிக்கும்போது பென்சனும் அதிகருக்கும்.  எனவே மேல குறித்த இந்த முன்று தகவல்களையும் ஒவ்வொரு குடும்ப பென்சனரும் தெரிந்துகொண்டால்தான் சரியான பென்சன் பெற முடியும்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...