Sunday 30 September 2012

மொபைல் போன்



ஒரு அண்ட் ராய்ட் மொபைல் போன் ஆருயிர் நண்பனுக்கு சமம்.

நவீன மொபைல் போன் ஒரு ஆடம்பர பொருள்.  நமக்கு வயதாகிவிட்டது, இனி தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் காணும் சந்திக்கும் அனைத்து மக்களிடமும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த போன் ஒன்று தான்.;  எனவே என் சிந்தனையை அதன் பக்கம் செலுத்தினேன்.  அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று துருவி துருவி என் பேரனிடம் கேட்டேன். அவன் “தாத்தா இதெல்லாம் உங்களுக்கு புரியாது” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டான். 

எனக்கு சுருக் என்றது. இதை இனி விடக்கூடாது என்று என் சிந்தனையை ஓடவிட்டதில் கிடைத்த அனுபவம்தான் இப்போது நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது. பேசுவதற்கு கண்டுபிடித்த போன் இன்று பேசாமலேயே எல்லா வேலைகளையும் செய்யும் அளவுக்கு வந்து விட்டது, வளர்ந்தும் விட்டது.

வயதானவர்களுக்கு வழிகாட்டியாக, வரி கட்டும் கருவியாக, வங்கி கணக்கின் கண்ணாடியாக, உலக செய்திகளையும் உள்ளூர் செய்திகளையும் உள்ளங்கையில் அள்ளி தெளிப்பது அழகான அண்ட் ராய்ட் போன்.  ஆயிரக்கணக்கான பாடல்களும், மனம் கவர்ந்த திரை படங்களும் நினைத்த நேரத்தில் கேட்கலாம், பார்க்கலாம்.  பாடலுடன் கூடிய காட்சிகளையும் படுத்துக்கொண்டே பார்க்கலாம். நீங்கள் தூங்கியவுடன் அதுவும் தூங்கிவிடும்.  உங்கள் வாய் மொழி கட்டளைகளை தன் சிரமேற் கொண்டு சலிக்காமல் செயல்படும்.  இந்த போன் இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு செய்யும் என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

அழகான குரலில் உங்கள் பெயரை சொல்லி “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?” என்று அந்த போன் கேட்பதிலேயே நீங்கள் மனம் நெகிழ்ந்து போவீர்கள்.  சென்னையில் உங்கள் நண்பர் வீட்டுக்கு செல்ல அந்த போனிடம் முகவரியை சொல்லி சில பட்டன்களை தட்டி அதன் சொல் படி நடந்தால் அவர் வீட்டு வாசலிலேயே உங்களை கொண்டுபோய் விட்டுவிடும். 
  
ஒருவேளை நீங்கள் போகும் வழியில் காணாமல் போய்விட்டாலும் கூட உங்கள் இருப்பிடத்தை உடனே காண்பித்துவிடும் உங்கள் பிள்ளைகளுக்கு.  உங்கள் வங்கி கணக்கில் காசு இல்லாவிட்டால், நல்ல நண்பர்கள் உதவியுடல் நொடிபொழுதில் உங்கள் கணக்கில் பணத்தை வரவைக்கும்.  ஆயிரம் காலத்து புகைபடங்களைகூட அழகுபடுத்தி குடும்ப ஆல்பமாக அவ்வப்போது கண்டு மகிழலாம்.  

 எந்த வகை பிரயாணம் ஆனாலும் உங்கள் போனில் முன் பதிவு செய்யலாம்.  உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாள், நட்சத்திரம் அனைத்தையும் பதிவு செய்து அவ்வப்போது வாழ்த்துக்கள் அனுப்பலாம்.  தனிமை என்னும் கொடிய வேதனையை போக்கும் அருமருந்தாக கையாழலாம் .  காணக்கிடைக்காத அருமையான கார்ட்டூன் படங்கள், கற்பனைக்கெட்டாத விளையாட்டுக்களை கண்டு மகிழலாம்.  கவலைகளை மறக்க சிறந்த கருவி இந்த போன்.  பள்ளிகூட பாடங்களைகூட பதிந்துவைத்து படிக்க சொல்லலாம். இன்னும் எத்தனையோ நல்ல பல உபயோகங்கள் இருந்தும் அதையெல்லாம் விட்டு விட்டு இன்னும் ரோட்டில் செல் போனில் பேசிக்கொண்டே போய் விபத்துக்களில் மாட்டி கொள்கிறார்கள் இளைஞர்கள். காதலர்களை சேர்த்து வைப்பதும் பிரிப்பதும் இந்த செல் போன்.  என்னைபோன்ற வயதானவர்களுக்கு இந்த போன் ஒரு சிறந்த நண்பன்.  மிகவும் சிக்கனமாக இருந்து சில ஆயிரங்களை சேமித்து ஒரு போன் வாங்கினேன்.  இப்போது எனக்கு நேரம் போவதே தெரியவில்லை.  உலக நடப்புகளை இந்த போன் மூலம் சில நாட்களில் தெரிந்து கொண்டேன்.  தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி இருப்பதால் செலவு பெரிதாக தெரியவில்லை.

நவீன உலகின் அற்புத கண்டுபிடிப்பு இந்த செல் போன்.  வசதி உள்ளவர்கள் ஒரு நல்ல அண்ட் ராய்ட் போன் வாங்கி படித்து கொள்வது நல்லது.

நான் வாங்கியிருப்பது SAMSUNG GALAXY Y GT S5360. விலை ரூ.7000/-

Thursday 27 September 2012

நமது போராட்டத்தில் கிடைத்தது



நமது சங்க தலைவர் 

ஒன் ரேங்க் ஒன் பென்சன் போராட்டத்தில் கிடைத்தது

இரண்டு குடும்ப பென்சன்.
நியாயமான குடும்ப பென்சன்.
உடல் ஊனமுற்ற, மன நிலை பாதிக்கப்பட்ட ராணுவத்தினர்
பிள்ளைகளுக்கு திருமணம் ஆனபின்னரும் பென்சன் கிடைக்கும்.
படை வீரர்களுக்கு ஓரளவுக்கு கூடுதல் பென்சன் கிடைக்கும்.

இவைகளின் முழு விபரமும் அரசு ஆணைகள் வெளிவந்தபின் தான்
தெரியும்.

ஒன் ரேங்க் ஒன் பென்சனுக்காக நமது போராட்டம் தொடரும்
என்று நமது சங்க தலைவர்
லெப்.ஜென.ராஜ் காடியான் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாம் அனைவரும் ஒன்று படுவோம், போராடுவோம்.



Wednesday 26 September 2012

ஒன் ரேங்க் ஒன் பென்சன் பெரும் ஏமாற்றம்.




“ஒன் ரேங்க் ஒன் பென்சன்”
ஒரு மாபெரும் ஏமாற்றம்

பல ஆண்டுகளாக கேட்கபட்டுவந்த ஒன் ரேங்க் ஒன் பென்சன் கோரிக்கையை கண்டிப்பாக அமுல் படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த இருபது லட்சம் படை வீரர்களை இந்த அரசு ஏமாற்றிவிட்டது.  மிகவும் தந்திரமாக செய்திகளை வெளியிட்டு ராணுவ வீரர்களுக்கு ஏதோ வாரி வழங்குவதுபோல் நாட்டு மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறது.  ஒரு சாதாரண சிப்பாய்க்கு இந்த அரசின் சூட்சிகள் புரியாத காரணத்தால், அரசின் அதிகார வர்க்கமும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

ஏமாற்றுபவர்கள் ஒரு நாள் பெருத்த ஏமாற்றத்தை அடையபோகிரர்கள்.
நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும் அதுதான் முக்கியம்.

ஜார்ஜ் வாஷிங்டன் கூறியதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்
“ஒரு நாட்டின் இன்றைய இளம் படை  வீரர்கள் போரில் எத்தனை வீரத்துடன் செயல்படுவார்கள் என்பது அந்த நாடு தன்னுடைய முன்னாள் படைவீரர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை பொறுத்துத்தான் இருக்கும்”

ஒரு புகழ்பெற்ற அனுபவசாலியின் கருத்து.
காலம்தான் இதற்க்கு தக்க பதில் சொல்லும்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின்கீழ் போராடினால்
ஒரே நாளில் கிடைக்கும் இந்த
ஒன் ரேங்க் ஒன் பென்சன்.

நாம் ஒன்று சேர்வோமா ?

இரங்கல் செய்தி.



இரங்கல் செய்தி

எங்களது ஆருயிர் நண்பர், இந்திய விமான படையில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய 
Hon.Flt.Lt. G.ராஜாராம் (Clk.GD)அவர்கள் 
25.9.2012 அன்று காலமானார்கள்.
அன்னார்  ஆன்மா சாந்தி அடைய 
எமது பிரார்த்தனைகள்.

நல்லடக்கம்  4.00 pm at அம்மைய்யப்பன் 
திருவாரூர்  மாவட்டம்.
on 26.9.2012.


Monday 24 September 2012

ONE RANK ONE PENSION APPROVED



ஓர் நற்செய்தி

நமது கோரிக்கையான  ஒன் ரேங்க் ஒன் பென்சன்  கொடுக்க 
அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

முழு விபரம் நாளை செய்தி தாள்களில் காணலாம்.

Saturday 22 September 2012

படை வீரர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா?



படை வீரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கபடுமா?

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்றே எதிர்பார்த்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.  படை வீரர்களின் பென்சன்  முரண்பாடுகள் அனைவராலும் ஒப்புகொள்ளபட்டது.  முப்படை தளபதிகளும் தங்களது முழு அதிர்ப்தியை தெரிவித்தும் இந்த அதிகார வர்க்கம் கண்டு கொள்வதாக இல்லை.

சுமார் இருபது லட்சத்துக்கும் மேல் உள்ள படை வீரர்களின் பிரச்னைகளை செவி மடுத்து கேட்க ஒரு ஒரு பிரதிநிதியை கூட அழைத்து பேச அதிகார வர்க்கமும் அரசியல் தலைவர்களும் முன்வரவில்லை.

ஒட்டுமொத்த பாதுகாப்;பு படை வீரர்களின் நலன்கள புறகணிப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த வேலையில்லா இளைஞர்கள் நிறைந்த நாட்டில் கூட, ராணுவத்தில் சேர யாரும் முன் வருவது இல்லை.  பல ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

படை வீரர்களின்  வாழ்க்கைத்தரத்தில், பொருளாதார மேம்பாட்டில், சமூக வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சனைகள்., இதன் காரணமாக அதிகரித்துவரும் தற்கொலைகள்.  வெளி நாட்டிலிருந்து படை எடுப்பவர்களிடம் இருந்து நம் நாட்டை பாதுகாக்க பயிற்சி பெற்ற நம் படை வீரர்கள், முழுக்க முழுக்க தீவிரவாதிகளை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பங்களை அடக்கவும் பயன்படுத்தபடுவது மாபெரும் துரதிர்ஷ்டம்.  போரில் நாம் இழந்த வீரர்களைவிட இந்த தீவிரவாதத்தை அடக்குவதில் நாம் இழந்து வரும் படைவீரர்கள் அதிகமாகிவிடும் போல் தெரிகிறது.

அமைதியான வாழ்க்கைக்கு நல்ல அரசியல் தீர்வுதான் வேண்டும்.  வெறும் அதிகார வர்க்கத்தின் பேச்சு வார்த்தைகளால் அமைதி நிலவ சாத்தியமில்லை.  படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் கடத்துவது நாட்டுக்கு நல்லதல்ல.  நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை யாரும் மறக்கலாகாது.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...